வேலூர் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையின் உள்ளே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில், சங்கடஹார சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.
இந்நாளை முன்னிட்டு மூலவர் விநாயகருக்குத் தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, விநாயருக்கு அருகம்புல் மற்றும் வண்ண மலர் மாலைகள் சூட்டப்பட்டு, பளபளக்கும் வெள்ளிக் கவசத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்தச் சிறப்பு வழிபாடுகளில் வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை மனதாரத் தரிசித்தனர். வழிபாட்டின் நிறைவாகச் சுவாமி உட்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
