Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா..!! பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!
ஆன்மீகம்

ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா..!! பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

editor5By editor5May 25, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Screenshot 2026 05 25 at 5.43.18 PM
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

குன்னூர் ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தின் அழகிய மலைப்பகுதியான குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாசாணி அம்மன் சன்னதி, பக்தர்களின் நம்பிக்கைக்குரிய பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு அம்மன் படுத்த வாக்கில் (சயன கோலத்தில்) அருள்பாலித்து வருவது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அதிகம் வருகை தரும் இந்தப் புனிதத் தலம், அம்மனின் அருளால் புகழ்பெற்று விளங்குகிறது.

ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீ மாசாணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விழா கோலம் பூண்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து, வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அம்மனின் அருளால் தங்கள் குழந்தைகளுக்கு நோய் நீங்கி, திருமணம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

Screenshot 2026 05 25 at 5.42.57 PMஇந்நிலையில், ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் வருடாந்திர திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூ குண்டம் இன்று (திங்கள்கிழமை) மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் உச்சக்கட்டமாகக் கருதப்படும் இந்த பூ குண்டம் நிகழ்ச்சியில், நெடுநாட்களாக கடுமையான விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் அம்மனுக்கு மனதார வேண்டுதல் செய்து, பூ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பூ குண்டத்தை கடந்து அம்மனின் அருளைப் பெற்றதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது பக்தர்கள் உணர்ச்சிபூர்வமாக அம்மனை வணங்கிய காட்சி பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மதிய உணவு நேரத்தில் கோயில் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ மாசாணி அம்மனை தரிசனம் செய்து, மலர்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பொருட்களை சமர்ப்பித்து வழிபட்டனர். திருவிழா முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவைகாசி விசாக திருவிழா 2026: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் திரளும் பக்தர்கள்..!!
Next Article திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயிலி வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்..! உகந்த நேரம் அறிவிப்பு..!
editor5

Related Posts

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.