Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!
Featured

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!

editor5By editor5August 6, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Screenshot 2026 08 06 at 2.08.47 PM
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாளின் அவதார பூமியாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் ஆண்டாள், பெரியாழ்வாரின் மகளாக பூமியில் அவதரித்து, இறைவனுக்காக பூமாலையும் பாமாலையும் அர்ப்பணித்து இறுதியில் அரங்கநாதரை அடைந்ததாக வைணவ மரபில் நம்பப்படுகிறது. ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதையொட்டி ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் நான்கு மாத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கருடன் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி, பட்டாச்சாரியார்களால் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 10ஆம் தேதி ஐந்தாம் திருநாளில் ஐந்து கருட சேவையும், 12ஆம் தேதி ஆண்டாள் மடியில் தலை வைத்து ரங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரு ஆடிப்பூர தேரோட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் நாட்களில் ஆண்டாள், ரங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக டிஎஸ்பி தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

andal temple srivilliputhur
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவிண்ணை பிளந்த “அரோகரா” கோஷம்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி பரணி – கிருத்திகை விழா!!
Next Article திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
editor5

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.