Author: Editor TN Talks

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை, கருவறை, கோபுரவிமான பூஜை ஆகியவற்றை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் தரப்பில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர் பதில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, பன்னிரு திருமுறைகள் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது முதல்…

Read More

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிய வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. கேசவமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது . 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும் அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றது. அப்போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால்…

Read More

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்களை பறைசாற்றும் வண்ண ரிப்பன்கள், வாண வேடிக்கைகள் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.. சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது தான் மூல காரணமாக இருந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது இந்த திருவிழா வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவில் வருடா வருடம் சாதிரீதியான வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வதும், பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க…

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கை 7-7-2025 அன்று காலை 06 மணி முதல் காலை 6.47 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் வரும்…

Read More

முருக பக்தர்கள் மாநாடு குறித்து பலரும் அவதூறாக பேசி வருகின்றனர்., இந்துக்களை ஒற்றுமை படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது. – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிய பேட்டி. மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில்., நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆறுபடை வீட்டின் கோபுரம் போன்ற அமைப்புடன் மட்டுமே மாநாடு நடத்த உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை வண்டியூர் செல்லும் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் 6 படை வீட்டில் இருந்து பூஜிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து கணபதி ஓமம், வேல் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து., முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை இந்து முன்னணி தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியன் பார்வையிட உள்ளார். முன்னதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்.…

Read More

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம். ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம். மதுரை ஜூன் 10: மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஆயிரகணக்கானோர் பங்கேற்று சுவாமி சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமுமான மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து, பெருமாள், தாயாருடன் தினமும் பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி. தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நூற்றுக்கணக்கான…

Read More

கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியில் அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன் மற்றும் கருப்பணசாமி கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்…… திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன், கருப்பணசாமி மற்றும் செல்வ விநாயகர் கோவில் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய விழாவில் இரவு மேளதாளம் தாரை வாணவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்கரகம் ஊர்வலமாக அழைத்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாலம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி சரவணன் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர், மேலும்…

Read More

இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என , மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர். எனவே முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில்…

Read More

ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் கும்ப ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. ராகு கும்ப ராசியிலும் சனி மீன ராசியிலும் மேஷத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் புதன், குரு சிம்மத்தில் கேது, செவ்வாய் என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் செயல்கள் நீங்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம்…

Read More

கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்க 10 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடித்திருக்க நம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். நம்முடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல வீட்டிலும் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். நாம் வசிக்கும் வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் அதிகம் இருந்தால் அந்த வீடு போர்க்களமாகவே இருக்கும். இல்லத்தரசிகள் அதிகம் இருக்கும் இடம் சமையல்அறைதான். அந்த அறை பொதுவாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் வடமேற்கில் வைத்திருப்பார்கள் பரவாயில்லை. ஆனால் தவறியும் கூட ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் படுக்கை அறையை வைத்து விடக்கூடாது. மிகப்பெரிய வீடு கட்டி படுக்கை அறையில் அலங்காரங்கள் செய்து வைத்து பஞ்சு மெத்தையில் படுத்தாலும் சிலருக்கு…

Read More