Author: Editor TN Talks

வேலூரில் ஆடிபெருக்கு தினமான இன்று ஸ்ரீ கங்காபாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள்  கைகளாலேயே சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்  உள்ள ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு ஆடிபெருக்கு தினமான இன்று  25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பஞ்சபூத மஹா யாகம் நடைபெற்றது. பூர்னஹதி நடந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் பொதுமக்கள் தங்கள் கைகளாலேயே  பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோபூஜையும்,  கலசாபிஷேகமும் நடைபெற்றது. மழை பெருகி, நீர் வளம் பெருகவும் தண்ணீர் பஞ்சம் முற்றிலும் நீங்கவும் கூட்டு பிரார்த்தனையுடன் இந்த அபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்

Read More

சேலம்  மாவட்டம்  தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள  வீரபத்திரன்  சுவாமி  கோவிலில் ஆண்டு  தோறும்  ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி குருமன்ஸ் இனத்தை  சேர்ந்த மக்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பொங்கல் வைத்தும் வினோத வழிபாடு செய்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். தேங்காய் சிதறும் போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழாவுக்காக ஆடி ஒன்றாம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். சுவேத நதியில் இருந்து தீர்த்தத்துடன் வீரபத்திரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்,  பின்பு அலங்கரிக்கப்பட்ட வீரபத்திரன் சுவாமியை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள், பின்னர் கோவில் வளாகத்தில் அமர்த்தப்பட்ட ஆண்கள்  மற்றும்  பெண்கள்  திருமணம்  நடக்க வேண்டியும், பேய்  பிடித்திருந்தால்  அதை  போக்கவும், குழந்தை  பாக்கியம்  வேண்டியும்  100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய்  உடைத்து நூதன…

Read More

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயில் பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் காவிரித் தாயை வணங்கி வழிபட்டதுடன், புதுமண தம்பதிகள் தாலி பெருக்கி அணிந்து  கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சள் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். அதேபோல் புதுமண தம்பதிகளும் திருமணத்தன்று அணிந்த மாலைகளை நீர் நிலைகளில் விட்டு தாலி பிரித்து கட்டி வணங்கி வருகின்றனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழராஜ வீதி அருகே உள்ள சாந்தராமன் கோயில் பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட காலை முதல் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ததோடு,  அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சள் கயிறுகளை கழுத்து…

Read More

ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில், அணையின் அடிவாரம் மட்டம் பகுதியில் மக்கள் காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து மூழ்கி புனித நீராடினர். மேலும் பொதுமக்கள் குல தெய்வ சாமி சிலைகளையும், பூஜை பொருட்களையும் காவிரி கரையில் வைத்து சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்னர். ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் அங்கு கூடியதால், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் காவிரி ஆற்றில் உள்ளனர். காவிரி ஆற்றில் நீராட வரும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்டா பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேட்டூர் அணையில் தண்ணீர் இன்றி பாறைகளாக காட்சி அளித்ததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Read More

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நீர்நிலைகளுக்கு வருகை புரிந்து நீர்நிலைகளுக்கு வழிபாடு செய்வர். நீர்நிலைகள் என்றும் வற்றாமல் இருக்க வேண்டும் என்றும் விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் வழிபாடு நடத்தப்படும். நீர் நிலைகளில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து கனிகள், பலகாரங்களை வைத்து ஊர் செழிக்கவும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்றும் வழிபாடு நடத்தப்படும். அதே சமயம் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள். பல்வேறு மக்களும் சொந்த பந்தங்களுடன் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கு நாளை கழிப்பர். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்றும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கு வழிபட்டு வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை மாற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர். கோவையைப் பொறுத்தவரை பேரூர் படித்துறை ஆடிப்பெருக்கு நாளில் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபடும் முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே…

Read More

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில்  அமைந்துள்ள ஸ்ரீசானாத்தி அம்மன் கோவிலில் 102-ஆவது ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பழனிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலயத்தின் 102-வது ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவ திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கரக ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் திடீரென கோவிலுக்கு வருகை தந்து, அருள்மிகு ஸ்ரீ சானாதி அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு செய்தார். அமைச்சரின் வருகையையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் மகா கும்ப கலசம் நினைவுப் பரிசாக வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள்,…

Read More

உலகப்புகழ் பெற்ற அறந்தாங்கி  ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் ஆடிமாத  திருவிழாவின் முதல் நாள் தேரோட்டத்தில்  10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஓம் காளி,ஜெய் காளி என முழங்கி தேரை இழுத்து வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன்  திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் இருக்கும் ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் காப்பு கட்டி திருவிழா நடத்தப்படும். அதன்படி கோவில் நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டு கடந்த 21.07.2026 அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டது. காப்பு கட்டுதலுக்கு பிறகு  தினந்தோரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும்,வீதி உலா நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனுக்கு முதல் நாள் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இத்திருத்தலத்தின்  தேரோட்ட திருவிழாவானது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் முதல் நாளான இன்று  தேரோட்டம் தொடங்கப்பட்டது. தேரோட்டத்தில் பக்தர்கள், மெய்யன்பர்கள் என…

Read More

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை தொடங்கியது. ஆன்மீக அரசியல் கட்சியின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல் கோவில்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திலிருந்து அரசியல் ஆன்மீக கட்சியின்  முருக பக்தர்கள் பேரவை சார்பில் அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவாபுரியில் உள்ள முருகன் திருக்கோவிலில் வேல் வைத்து வழிபாடு செய்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் வேல் யாத்திரை தொடங்கியது. சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை, திருத்தணி என ஆறுபடை வீடுகளுக்கு 108 வேலுடன் யாத்திரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி சிறுவாபுரியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு வேல் வழங்கி வாரந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்…

Read More

திருவண்ணாமலை அருகே 100 ஆண்டு பழமையான பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை மாவட்டம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாறு கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மன்னார் சுவாமி உடனுறை ஸ்ரீ பார்வதி அம்சமான அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் 104-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அம்மன் வீதியுலா மற்றும் நேர்த்திக்கடன் விழாவை முன்னிட்டு, பம்பை, உடுக்கை மற்றும் மேள தாளங்கள் முழங்க பூங்கரகம் மற்றும் உற்சவ அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் முதலாவதாக பூங்கரகம் இறங்கியது. பின்னர், காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளில் வேப்பிலை மற்றும் எலுமிச்சைக் கனிகளை ஏந்தியபடி ஈர ஆடை உடுத்திக் கொண்டு தீ மிதித்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பூங்கரகம் ஏந்தி முதல் சுற்று தீக்குண்டத்தில் இறங்கியபோது, பூங்கரகம் எடுத்து வந்த…

Read More

விவசாயம் செழித்தோங்கவும், குடும்பங்களில் நலமும் வளமும் செல்வச் செழிப்பு பெருகவும் கேரளாவில் ஆண்டு தோறும்  நிறை புத்தரிசி வழிபாடு கோவில்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் புத்தரிசி பூஜை நடைபெற உள்ளதாக சபரிமலை தேஸ்வதானம் போர்டு அறிவித்துள்ளது. இதற்காக முந்தைநாளான 2-ந் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 3-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அந்த நெற்கதிர்கள்…

Read More