Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆடி முதல் வெள்ளி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.
Featured

ஆடி முதல் வெள்ளி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.

Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
020 Thiruverkadu
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

020 Thiruverkadu A

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்படும் 108 சிறப்பு சங்காபிஷேகம் என்று ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.‌

ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று காலை ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.‌ அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

020 Thiruverkadu B

ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர். தண்ணீர், மோர், கூழ், பானகம் போன்றவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.

தேவி கருமாரியம்மனை தரிசனம் செய்ய திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மதுரவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Aadi First Friday Aadi Velli Devi Karumariamman Temple Thiruverkadu Karumariamman Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமணப்பாறை நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா; ஏராளமான பக்தர்கள் பால்குடமெடுத்து வேண்டுதல் நிறைவேற்றம்
Next Article ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.