Author: Editor TN Talks
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் 53-ம் ஆண்டு தேர் திரு விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் 53-ம் வருட தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.. ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 53-ம் ஆண்டு திருவிழாவுக்கான கொடியினை, மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்பணி. ஆரோக்கிய சவரியப்பன், ஜெயம் செய்து ஏற்றி வைத்தார். முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ராஜ் முன்னிலையில் நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது.. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த தேர்திருவிழாவின் 8-ம் நாள், சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில், மாபெரும் வான வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.. 12-ம் தேதி ஞாயிறு காலை 8.30 மணியளவில், திருவிழா திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ்,…
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாங்கனி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை வழங்கியும், பிரசாதமாக பெற்றுக் கொண்டும் சிவனை வழிபட்டனர் 63 நாயன்மார்களில் ஒருவரான பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்டவருமான ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலில் விமரிசையாக நடைபெறும். இன்று மாங்கனி திருவிழா நாளையொட்டி காரைக்காலில் வெகுவிமர்சையாக மாங்கனி திருவிழா நடைபெற்றது. அதே போன்று காரைக்கால் அம்மையார் எழுந்தருளியுள்ள புதுச்சேரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று நடைபெற்ற மாங்கனி திருவிழாவில் பரமசிவன் அடியார் கோலத்தில் பத்ம ஆசனத்தில் அமர்ந்து மாங்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பவழக்கால் விமானத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காரைக்கால் அம்மையருக்கு மாங்கனிகளை வழங்கியும், பூஜை செய்த மாங்கனிகளை பிரசாதமாக பெற்றுக்கொண்டு காரைக்கால் அம்மையாரையும்,…
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனி தேரோட்டத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமான திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்ததை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
திருச்சியில் அமைந்துள்ள பூலோகநாதர் சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த புனித நிகழ்வில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசித்து அருள்பெற்றனர். கும்பாபிஷேக விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீர்த்தமலையில் அமைந்து உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா எனப் பக்திப் பெருக்குடன் முழங்கினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் தீர்த்தமலை பகுதியில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவயானி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் யாகங்கள் அமைக்கப்பட்டு, வஸ்திரங்கள், தானிய வகைகள், மூலிகைப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மலர் வகைகள், பழ வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள ஸ்ரீஆத்மநாதசுவாமி கோவில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆத்மநாதா, மாணிக்கவாசகா என முழங்கி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.. உலக புகழ்பெற்றதும், மிகவும் பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஆவுடையார்கோவில் யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாதசாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆனி மாத திருமஞ்சன திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு ஆனி மாத திருமஞ்சன திருவிழாவானது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து,தேர்…
கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தின் 40-ஆம் ஆண்டு ரூபி ஜூபிலி (Ruby Jubilee) திருவிழா மிகச் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவில் 17 தேர்கள் பவனி வந்தன. மின்னொளியில் ஜொலித்தபடி தேரில் வந்த சுரூபங்களை பக்தர்கள் மெழுகுவத்தி ஏந்தி வழிபட்டனர். புலியகுளம் புனித அந்தோனியாருடைய திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அருண் அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு 40-ஆம் ஆண்டு ஆலயம் கட்டி, ரூபி ஜூபிலி ஆண்டை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். இந்த விழா ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து புனித அந்தோனியாரை தரிசித்துச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டு முழுவதும் 40-வது ஆண்டு ரூபி ஜூபிலி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் பல நிகழ்ச்சிகளை நடத்தி, இந்த ஆண்டு முழுக்க சிறப்பிக்க இருக்கிறோம். ஆலய சீரமைப்புப் பணிகளும் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது.…
புதுச்சேரியில் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழாவில் நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே பழமைமிக்க தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. இதன் 119-வது ஆண்டு பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவ நாட்களில் காலை மாலை இரு வேளையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தூய இருதய ஆண்டவரை வழிபட்டனர்.
சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில், வரும் 18ஆம் தேதி ஸ்ரீ விஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஸ்ரீவிஜயகணபதி என மகா பெரியவர் பெயரிட்ட இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகர், காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அருளுவதோடு கவலைகளை நீக்கு சுபிட்சம் தருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இந்த ஆலயத்துக்கு வந்து விஜயகணபதியைத் தரிசனம் செய்து அவருக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபட்டுச் சென்றால் கூடிய விரைவில் நல்லது நடைபெறும் என்பதும் பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்த ஆலயத்தில் மூலவராக விநாயகர் எழுந்தருளியிருக்க ஸ்ரீவிஜயகுமாரசுவாமி, ஸ்ரீ விஜயராகவர், ஸ்ரீ விஜய மணிகண்டர், ஸ்ரீவிஜயதுர்கா, ஸ்ரீவிஜயமாருதி மற்றும் நவகிரகங்கள் ஆகியோரும் சந்நிதிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ரனர். கடந்த 22.6.1994-ம் முதல் இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடைபெறும் மகாகணபதி ஹோமம் பக்தர்கள் கலந்து கொண்டு கணபதி அருள் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட பெருமையும் மகிமையும் வாய்ந்த விஜய கணபதி…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானின் சீற்றத்தால் பிரம்மனின் ஒரு தலை கொய்யப்பட, அந்த பிரம்மனின் கபாலம் (தலை) சிவபெருமானின் கரத்தில் ஒட்டிக்கொண்டது. மேலும், ‘கபாலன்’ என்ற பூதம் சிவபெருமானைப் பின்தொடர்ந்து சென்று, அவர் பிச்சையெடுக்கும் உணவை எல்லாம் உண்டு அவரைப் பட்டினி போட்டது. இதனால் சிவபெருமான் கபாலத்துடன் மயானங்களில் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி, சிவபெருமானின் சாபத்தைப் போக்க விஷ்ணுவின் ஆலோசனைப்படி மேல்மலையனூரில் ஐந்து தலை நாகமாக புற்றில் அவதாரம் எடுத்தார். அதன்பின் பார்வதி தேவி, கபாலன் உணவை உண்ணும் சமயம் விஸ்வரூபமெடுத்து அவனைத் தனது வலது காலால் மிதித்து அடக்கினார். இதனால் சிவபெருமானின் தோஷம் நீங்கி, மீண்டும் சாந்தமடைந்தார். சிவபெருமான் சாபம் நீங்கி ஆனந்தமாக சிதம்பரம் சென்றதால், இங்குள்ள ஈசன் தாண்டேஸ்வரர்…
