கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் 53-ம் ஆண்டு தேர் திரு விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் 53-ம் வருட தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது..
ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 53-ம் ஆண்டு திருவிழாவுக்கான கொடியினை, மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்பணி. ஆரோக்கிய சவரியப்பன், ஜெயம் செய்து ஏற்றி வைத்தார்.

முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ராஜ் முன்னிலையில் நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது..
தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த தேர்திருவிழாவின் 8-ம் நாள், சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில், மாபெரும் வான வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது..
12-ம் தேதி ஞாயிறு காலை 8.30 மணியளவில், திருவிழா திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ், நிறைவேற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

