Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!
Featured

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 29 17h02m26s968
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், திருவெஃகா பெரிய பெருமாள் திருக்கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் திருக்கோவிலில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

கருடசேவை விழாவையொட்டி, ஸ்ரீ யதோத்தகாரி பெருமாளுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வைலெட் நிற பட்டாடை, திருவாபரணங்கள், மல்லிகைப் பூ மற்றும் பல்வேறு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், பச்சை நிற பட்டாடை அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து துபம், தீபம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

vlcsnap 2026 07 29 17h02m38s418

இதையடுத்து, “பெரிய திருவடி” என அழைக்கப்படும் கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள், முதலில் கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். பின்னர் மேளதாளம், நாதஸ்வர இசை முழங்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதியுலா முழுவதும் பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி பெருமாளை வழிபட்டனர். கருடசேவை உற்சவத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியது. பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

AadiFestival GarudaSevai Kanchipuram YathothkariPerumal
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
Next Article குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்
Editor web2
  • Website

Related Posts

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

July 29, 2026

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

July 29, 2026

பௌர்ணமி நிலவொளியில் ஒளிர்ந்த திருச்செந்தூர் கடற்கரை..!! பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

பௌர்ணமி நிலவொளியில் ஒளிர்ந்த திருச்செந்தூர் கடற்கரை..!! பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

Trending Posts

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

July 29, 2026

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

July 29, 2026

பௌர்ணமி நிலவொளியில் ஒளிர்ந்த திருச்செந்தூர் கடற்கரை..!! பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

July 29, 2026

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

July 29, 2026

தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.