Author: Editor web2
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா இன்று தொடங்கிய நிலையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கடந்த 4-ஆம் தேதி ஆடி அஸ்வினி நட்சத்திரத்துடன் தொடங்கிய திருவிழா, நேற்று ஆடி பரணி விழாவுடன் தொடர்ந்தது. அதன் உச்ச நிகழ்வாக இன்று அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவித்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் புனித நீராடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை ஏந்தியும், அலகு…
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கோயில் வளாகம் மற்றும் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மட்டும் 78,709 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்தனர். இதில் 31,312 பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகத் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் அன்றைய ஒரு நாள் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.4 கோடியே 76 லட்சம் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் 3 லட்சத்து 97 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. பக்தர்களின் வசதிக்காகத் தேவஸ்தானம் சார்பில் இடைவிடாது அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2 லட்சத்து 26 ஆயிரம் பக்தர்கள் 3 வேளை அன்னப்பிரசாதம் அருந்தியுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட 2,939 பக்தர்களுக்குத் தேவஸ்தான மருத்துவக் குழுவினர்…
பவுர்ணமி நாளில் சந்திர பகவானை வழிபடுவதுடன், வெற்றிலை மீது விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. இந்த வழிபாடு குடும்பத்தில் அமைதி, செல்வ வளம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை மேற்கொள்ள, பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பித்தளைத் தட்டில் இரண்டு வெற்றிலைகளை வைத்து, அவற்றின் மீது சிறிதளவு பச்சைக் கற்பூரம் தடவ வேண்டும். பின்னர், இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து விளக்கில் வைத்து ஏற்றி, சந்திர பகவானை மனமார வழிபட வேண்டும் என்று ஆன்மிக அறிஞர்கள் கூறுகின்றனர். பக்தர்களின் நம்பிக்கையின்படி, இந்த வழிபாட்டால் குடும்பத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சனைகள் நீங்குவதுடன், மன அமைதி, குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் மற்றும் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும். சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும், கணவன்-மனைவியிடையேயான மனக்கசப்புகள் விலகி நல்ல புரிதல் உருவாகும் என்றும் நம்பப்படுகிறது. ஜோதிடத்தில் சந்திரன் வீடு, தாயார், வாகனம்…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாய்பாபா திருக்கோவிலில் குரு பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அதிகாலை 6 மணியளவில் காகட் ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளால் சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் ஹோமக் குண்டம் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் மற்றும் ஸ்ரீ சாய்நாதரின் அருள் வேண்டி மகா சங்கல்ப பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், சத்ய நாராயண பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் மகா ஆரத்தி நடைபெற்றதையடுத்து, கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியபாளையம், குமரப்பேட்டை, ஆரணி, தண்டலம்,…
காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், திருவெஃகா பெரிய பெருமாள் திருக்கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் திருக்கோவிலில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர். கருடசேவை விழாவையொட்டி, ஸ்ரீ யதோத்தகாரி பெருமாளுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வைலெட் நிற பட்டாடை, திருவாபரணங்கள், மல்லிகைப் பூ மற்றும் பல்வேறு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், பச்சை நிற பட்டாடை அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து துபம், தீபம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, “பெரிய திருவடி” என அழைக்கப்படும் கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள், முதலில் கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். பின்னர் மேளதாளம், நாதஸ்வர இசை முழங்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய…
ஆடி மாத வளர்பிறை செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி செவ்வாயை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பிறகு மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் புகழூர், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் சிகர நிகழ்வான சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கு காட்சி அளிக்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண தென்காசி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கோமதி அம்மன் தேரோட்டம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று 11-வது திருநாளில் ஆடித்தபசு காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்மன் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் மதியம் கோமதி அம்மன் தங்கச் சப்பரத்தில் தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாதப் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பாவித்து பக்தர்கள் வழிபாடுகின்றனர். இதனால், மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவுகொண்ட கிரிவலப் பாதையில், ஒவ்வொரு மாத பவுர்ணமி தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, பவுர்ணமி திதியானது நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.32 மணிக்குத் தொடங்கி, நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணி வரை நீடிக்கிறது. இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டுப் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்…
புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலின் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்டத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். தமிழகத்தின் தொன்மை வாய்ந்த சைவ-வைணவ ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் சங்கரன்கோவில் திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழா நாட்களின் போது தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7-ஆம் நாளான நேற்று முன்தினம் இரவு, பூம்பல்லக்கில் கோமதி அம்மன் வீதி உலா வந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் 9-ஆம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலையிலேயே சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் தேரில் உற்சவர்…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஞாயிறு வார விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பழனி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதி வீதி மற்றும் பாதவிநாயகர் கோவில் வளாகம் ஆகிய பகுதிகள் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் (Winche) நிலையங்களில்…
