Author: Editor web2
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி புராதன சின்ன ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரங்களைச் சுற்றி பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகள், மாநில அளவிலான நிபுணர் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கோவிலுக்குள் மண்டபம் கட்டப்பட்டுள்ளதாகவும், பரதநாட்டிய அரங்கம் கோசாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த பொது தீட்சிதர்கள் தரப்பு, புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தது. விசாரணையின் போது,…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் 166-வது பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் 166-வது ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனோடு ஐக்கியமான திருநாளை நினைவுகூரும் வகையில், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ சேரமான் நாயனார் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சீகக்காய் தூள், மஞ்சள் தூள், பச்சரிசி மாவு, 100 கிலோ பஞ்சாமிர்தம், தேன், 500 லிட்டர் பால், 300 லிட்டர் தயிர், 10 கிலோ விபூதி…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலுத்து தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத திருவிழா, இந்த ஆண்டும் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், ஸ்ரீ தும்பவனத்தம்மன் 30 திருக்கரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் எழுந்தருளிய அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் திரண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ தும்பவனத்தம்மனின் ஆடி மாத திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரகாட்டம், தாரை தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், பம்பை இசை முழங்க உற்சவ மூர்த்தி கோயிலிலிருந்து புறப்பட்டு கோட்ராம்பாளையம் தெரு, ரங்கசாமி குளம், நாகலத்து மேடு, நாகலுத்து தெரு, மந்தவெளி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா…
ஆடி மாதத்தின் முதல் நாளும், முதல் ஆடி வெள்ளிக்கிழமையும் இணைந்து வந்ததை முன்னிட்டு, தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் வெகுவிமர்சையாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பெண்கள், குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆடி மாதம் முழுவதும் விரதம் மேற்கொள்ள உள்ள பக்தர்கள், கோயில் வளாகத்தில் காப்புக் கட்டி தங்களது விரதத்தை பக்தி உணர்வுடன் தொடங்கினர். இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் கௌமாரியம்மனுக்கு வண்ணப் பட்டு ஆடைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால், கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ஆனி பிரம்மோற்சவ விழாவின் 10-ஆம் நாளையொட்டி, அய்யங்குளம் கரையில் பாரம்பரிய தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில், ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஒன்பது நாட்களாக விநாயகர், சந்திரசேகரர், சின்ன நாயகர், சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 10-ஆம் நாளான இன்று, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் எழுந்தருளி ஊர்வலமாக அய்யங்குளம் கரையை வந்தடைந்தார். அங்கு சிவாச்சாரியார்கள் சூலத்தை குளத்தில் மூன்று முறை மூழ்கடித்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தினர். இந்த புனித தீர்த்தவாரி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து வழிபட்டனர். திருவண்ணாமலையில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற…
தமிழ் மாதமான ஆடி மற்றும் மலையாள மாதமான கருக்கிடகத்தின் பிறப்பையொட்டி நடைபெறும் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஜூலை 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பக்தர்கள் ஜூலை 21 வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடை திறந்து, யோகநித்திரையில் உள்ள ஐயப்பனுக்கு தீபாராதனை செய்து வழக்கமான பூஜைகளைத் தொடங்கி வைப்பார். பின்னர் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள் 18-ஆம் படியேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜூலை 21 வரை நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்ட பின் நடை அடைக்கப்படும். ஜூலை 21ம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகளில்…
சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வாராஹி நவராத்திரி (ஆஷாட நவராத்திரி) நேற்று (ஜூலை 14) தொடங்கியது. ஜூலை 23 வரை நடைபெறும் இந்த ஒன்பது நாள் விழாவையொட்டி,தமிழகம் முழுவதும் உள்ள வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை அனுஷ்டிக்கப்படும் வாராஹி நவராத்திரி, சக்தி வழிபாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சாரதா நவராத்திரி, தை வசந்த நவராத்திரியைப் போலவே, ஆஷாட நவராத்திரியும் வாராஹி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய விழாவாக பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில், சென்னை தாம்பரம் அருகே உள்ள ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் உள்ளிட்ட பல ஆலயங்களில் தினமும் சிறப்பு அலங்காரம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாத விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சப்த மாதர்களில் ஒருவராக போற்றப்படும்…
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை நாளை (ஜூலை 16) ஒடிசா மாநிலம் பூரியில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பூரியில் குவிந்துள்ளனர். இந்த ஆண்டுக்காக புதிதாக மூன்று பிரமாண்ட மரத்தேர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சடங்குகள் நிறைவடைந்த பிறகு, பூரி மன்னர் கஜபதி மகாராஜா தங்கத் துடைப்பத்தால் தேரை சுத்தம் செய்யும் நிகழ்வைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்படுகின்றன. பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுக்க உள்ளனர். சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு தேர்கள் சென்றடைந்த பின், ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து மீண்டும் ஜெகநாதர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வுடன் ஜூலை 24-ஆம் தேதி ரத யாத்திரை நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி ஒடிசா அரசு மற்றும் கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. 13…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவு உற்சவத்தில், விநாயகர், சின்ன நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 8-ஆம் தேதி 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், ஏழாம் நாள் இரவு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், சின்ன நாயகர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சரவிளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ராஜகோபுரம் முன்பு அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் விநாயகர், சின்ன நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர். தொடர்ந்து,…
ஆனி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனி அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அமாவாசை நாளையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை சோதனைச் சாவடி திறக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லையா என்பதை தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு…
