Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!
Featured

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

Editor web2By Editor web2July 23, 2026Updated:July 23, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Natarajar temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி புராதன சின்ன ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரங்களைச் சுற்றி பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகள், மாநில அளவிலான நிபுணர் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கோவிலுக்குள் மண்டபம் கட்டப்பட்டுள்ளதாகவும், பரதநாட்டிய அரங்கம் கோசாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த பொது தீட்சிதர்கள் தரப்பு, புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தது.

விசாரணையின் போது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட புராதன சின்ன ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புராதன கோவில்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் மற்றும் அவற்றுக்கான அனுமதிகள் தொடர்பான விவகாரங்களை இந்த ஆணையம் பரிசீலிக்கும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி புராதன சின்ன ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ChidambaramTemple HeritageConservation MadrasHighCourt tamilnadu
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!
Next Article மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?
Editor web2
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.