Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»ஆடி முதல் வெள்ளி… வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
திருவிழா

ஆடி முதல் வெள்ளி… வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

Editor web2By Editor web2July 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 17 18h09m45s356
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆடி மாதத்தின் முதல் நாளும், முதல் ஆடி வெள்ளிக்கிழமையும் இணைந்து வந்ததை முன்னிட்டு, தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் வெகுவிமர்சையாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பெண்கள், குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆடி மாதம் முழுவதும் விரதம் மேற்கொள்ள உள்ள பக்தர்கள், கோயில் வளாகத்தில் காப்புக் கட்டி தங்களது விரதத்தை பக்தி உணர்வுடன் தொடங்கினர்.

இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் கௌமாரியம்மனுக்கு வண்ணப் பட்டு ஆடைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

vlcsnap 2026 07 17 18h09m56s456

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால், கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினரும், கோயில் ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், ஆடி மாதத்தை முன்னிட்டு கோயில் முன்பாக பக்தர்கள் சார்பில் பாரம்பரிய முறையில் கூழ் காய்ச்சி, அன்னதானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வத்துடன் கூழைப் பெற்று அருந்தி, அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

ஆடி மாதத்தின் தொடக்க நாளில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடு, பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.

AadiFestival AadiVelli theni VeerapandiGowmariamman
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடி முதல் வெள்ளி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
Next Article இன்றைய (18.07.2026) ராசி பலன் – மீனம்
Editor web2
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

களைகட்டிய ரத்தினகிரி முருகன் கோயில்..!! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

July 14, 2026

புதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!

June 6, 2026

இன்றைய (30.07.2026) நாளின் ராசிபலன் – துலாம்

July 30, 2026

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

July 29, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.