Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
Featured

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Palani temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஞாயிறு வார விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பழனி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதி வீதி மற்றும் பாதவிநாயகர் கோவில் வளாகம் ஆகிய பகுதிகள் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் (Winche) நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வழிகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பொறுமையுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் மலைக்கோவிலுக்குச் செல்ல தற்காலிகமாக ஒருவழிப்பாதை திறக்கப்பட்டுப் பக்தர்கள் முறைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கக் காவல் துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

DevoteesSurge palani PalaniMuruganTemple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருவண்ணாமலை; பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா… பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!
Next Article சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா: விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!
Editor web2
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.