Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»75 ஆண்டுகள் பழமையான கோயிலில் குடமுழுக்கு..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
Featured

75 ஆண்டுகள் பழமையான கோயிலில் குடமுழுக்கு..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Editor web1By Editor web1May 20, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
4 5
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஈரோடு மாவட்டம் கோபி வண்டிபேட்டையில் அமைந்துள்ளது 75 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஏரி மாரியம்மன் கோயில். இங்கு விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு தனித் தனி பிரகாரம் உள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் குடமுழுகு விழா தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முளைப்பாலிகை இடுதல், 15-ம் தேதி விநாயகர் பூஜை, நவகிரஹ யாகம் மற்றும் கணபதி யாகமும் பின்னர் பவானி கூடுதுறை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.

அதன்பின் 17-ம் தேதி முளைப்பாலிக கோயிலுக்கு கொண்டு வருதல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல்கால யாக பூஜை, 18-ம் தேதி பூத சுத்தி, பாவனாபிஷேகம், மூர்த்தி கும்ப பூஜை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூல மந்திர ஹோமமும், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

19-ம் தேதி காலையில் விநாயகர் பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல், நான்காம் கால யாக பூஜை, மாலையில் தாமரை மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து 5-ம் கால யாக பூஜை மற்றும் ஸ்ரீ ஏரி மாரியம்மனுக்கு ரஜபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது. இன்று காலை நாடி சந்தனம், சக்திகளை திருமேனியில் சேர்த்தலை தொடர்ந்து புனித நீர் உள்ள கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீ ஏரி மாரியம்மன், விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் கோயில் கோபுரங்களை அடைந்தனர்.

பின்னர் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் கோபி, வண்டிபேட்டை, மார்க்கெட், கச்சேரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவடபழனி ஆண்டவனுக்கு அரோகரா..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!! பக்தர்களுக்கு அழைப்பு..!!
Next Article சதுரகிரி மலை: இறைவனும், சித்தர்களும் வாழும் பூமி!
Editor web1
  • Website

Related Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Trending Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.