இந்தியாவின் மிக முக்கியான ஆன்மீக தலம் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோயில். பணக்கார கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். அப்படி உள்ளூர், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இலவச தரினத்திலும், சிறப்பு கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வர். விடுமுறை தினங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பக்தர்கள் இங்கு வருகை புரிவர். அந்த வகையில் கடந்த 19-ம் தேதி மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 90,956பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதில் 33,046பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி இருப்பதாகவும் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05கோடி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினம் 4.44லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப் போல, அதேபோல், 2 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 708 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது 31 காத்திருப்பு அறைகள் நிரம்பியுள்ள நிலையில், எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசன பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்தி ருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
