ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீசானாத்தி அம்மன் கோவிலில் 102-ஆவது ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
பழனிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலயத்தின் 102-வது ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவ திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து கரக ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் திடீரென கோவிலுக்கு வருகை தந்து, அருள்மிகு ஸ்ரீ சானாதி அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு செய்தார்.
அமைச்சரின் வருகையையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் மகா கும்ப கலசம் நினைவுப் பரிசாக வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
