Author: Editor TN Talks
உலகப்புகழ் பெற்ற அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவின் முதல் நாள் தேரோட்டத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஓம் காளி,ஜெய் காளி என முழங்கி தேரை இழுத்து வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் இருக்கும் ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் காப்பு கட்டி திருவிழா நடத்தப்படும். அதன்படி கோவில் நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டு கடந்த 21.07.2026 அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டது. காப்பு கட்டுதலுக்கு பிறகு தினந்தோரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும்,வீதி உலா நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனுக்கு முதல் நாள் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இத்திருத்தலத்தின் தேரோட்ட திருவிழாவானது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் முதல் நாளான இன்று தேரோட்டம் தொடங்கப்பட்டது. தேரோட்டத்தில் பக்தர்கள், மெய்யன்பர்கள் என…
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை தொடங்கியது. ஆன்மீக அரசியல் கட்சியின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல் கோவில்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திலிருந்து அரசியல் ஆன்மீக கட்சியின் முருக பக்தர்கள் பேரவை சார்பில் அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவாபுரியில் உள்ள முருகன் திருக்கோவிலில் வேல் வைத்து வழிபாடு செய்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் வேல் யாத்திரை தொடங்கியது. சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை, திருத்தணி என ஆறுபடை வீடுகளுக்கு 108 வேலுடன் யாத்திரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி சிறுவாபுரியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு வேல் வழங்கி வாரந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்…
திருவண்ணாமலை அருகே 100 ஆண்டு பழமையான பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை மாவட்டம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாறு கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மன்னார் சுவாமி உடனுறை ஸ்ரீ பார்வதி அம்சமான அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் 104-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அம்மன் வீதியுலா மற்றும் நேர்த்திக்கடன் விழாவை முன்னிட்டு, பம்பை, உடுக்கை மற்றும் மேள தாளங்கள் முழங்க பூங்கரகம் மற்றும் உற்சவ அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் முதலாவதாக பூங்கரகம் இறங்கியது. பின்னர், காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளில் வேப்பிலை மற்றும் எலுமிச்சைக் கனிகளை ஏந்தியபடி ஈர ஆடை உடுத்திக் கொண்டு தீ மிதித்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பூங்கரகம் ஏந்தி முதல் சுற்று தீக்குண்டத்தில் இறங்கியபோது, பூங்கரகம் எடுத்து வந்த…
விவசாயம் செழித்தோங்கவும், குடும்பங்களில் நலமும் வளமும் செல்வச் செழிப்பு பெருகவும் கேரளாவில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி வழிபாடு கோவில்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் புத்தரிசி பூஜை நடைபெற உள்ளதாக சபரிமலை தேஸ்வதானம் போர்டு அறிவித்துள்ளது. இதற்காக முந்தைநாளான 2-ந் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 3-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அந்த நெற்கதிர்கள்…
உத்திரமேரூர் அருகே அழிசூர் நூக்கலம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நூக்கலம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, திரளான பெண்கள் ஆலயம் முன்பு அமர்ந்து திருவிளக்கு வைத்து தீபம் ஏற்றி உலக நன்மைக்காகவும், குடும்பம் செல்வ செழிப்புடன் திகழ்வும், மழை வேண்டியும், மாங்கல்யம் பாக்கியம் நிலைக்கவும் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர், திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா முனீஸ்வரர் திருக்கோவிலில் அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து தினசரி மண்டல பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. மண்டல பூஜையின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று 108 பால்குட ஊர்வலம் திருக்கோவில் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் வளாகத்தில் 108 பால்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி கோவில் வளாகத்தில் இருந்து காந்தி ரோடு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத் தெரு, சித்தூர் ரோடு மற்றும் சர்ச் ரோடு வழியாக ஊர்வலமாகச் சென்று மகா முனீஸ்வரர் திருக்கோவிலை அடைந்தனர். அங்கு சுவாமிக்கு 108 பால்குடங்களால் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம்…
ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ அல்லது ‘வராஹி நவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். எதிரிகளை அழிக்கவும், தடைகளை நீக்கவும், சகல ஐஸ்வர்யங்களைப் பெறவும் இந்த நாட்களில் பக்தர்கள் அம்மனை மனமுருகி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான (2026) ஆஷாட நவராத்திரி ஜூலை 15ம் தேதி தொடங்கி, ஜூலை 23ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் ஆஷாட நவராத்திரி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக ஜூலை 13ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. அன்றைய தினம் வராஹி தேவிக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 14ஆம் தேதி மஞ்சள் அலங்காரத்துடன், 15ஆம் தேதி குங்கும அலங்காரத்துடன்ம் வராஹி தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 16ம் தேதி சந்தன அலங்காரத்துடன் காட்சி…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், உள்ளிட்ட விசேஷ பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ,சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ,உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து கோவில் எதிரில் பொங்கல் வைத்தும். குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும் காது குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அங்காளம்மனுக்குஅங்க பிரதட்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.…
தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில், சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்களின் வருகை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான நிழற்பந்தல் வசதிகள்…
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்படும் 108 சிறப்பு சங்காபிஷேகம் என்று ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஆடி முதல்…
