திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனீஸ்வர பகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.*

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்துடன் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சனீஸ்வர பகவான் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடைபெற உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version