Author: Editor web1
நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்து காணப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் சுபமாக முடியும். வேலையில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் லாபத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடற்பயிற்சி நன்மை தரும். அதிர்ஷ்ட எண்: 9 நிறம்: சிவப்பு
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வர வேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரும். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையும். முதியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்: 6 நிறம்: வெள்ளை
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொல்வாக்கும், செல்வாக்கும் கூடும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த சச்சரவுகள் விலகும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி வரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான நல்லசெய்தி கிடைக்கும். பயணங்களின் போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்: 5 நிறம்: பச்சை
மனதில் சில தேவையற்ற பயமோ அல்லது குழப்பமோ தோன்றி மறையலாம். நிதானம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைச் சில நாட்கள் தள்ளிப்போடுவது நல்லது. உறவுகளுடன் சிறு விவாதங்கள் வரலாம்; விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தலைவலி அல்லது அசதி இருக்கும் அதிர்ஷ்ட எண்: 2 நிறம்: வெள்ளை
நிர்வாகத்திறன் வெளிப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் விரைந்து கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கண் மற்றும் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகளில் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட எண்: 1 நிறம்: வெளிர் மஞ்சள்
தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சிறப்பான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வேலையில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு தொடர்பான தகவல்கள் சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலன் சீராக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 5 நிறம்: இளம் பச்சை
சுபச் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆன்மிகப் பயணங்கள் அல்லது புண்ணிய தலங்களுக்கு செல்லத் திட்டமிடுவீர்கள். வேலை மாற்றத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு கூடும். தூக்கமின்மை பிரச்சனை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 6 நிறம்: இளஞ்சிவப்பு
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கடினமான சவால்களை விடாமுயற்சியுடன் சுலபமாக எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். கொடுக்கல்-வாங்கல் விவகாரங்களில் சாதகமான சூழல் நிலவும். வேலையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். நரம்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட எண்: 9 நிறம்: அடர் சிவப்பு
எடுத்த காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி சுபமாக நிறைவடையும். தொழில் விரிவாக்கம் தொடர்பான கடன் உதவிகள் எளிதாகக் கிடைக்கும். வேலையில் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபகாரிய பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடக்கும். தந்தையின் வழியில் ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த உடல் தொந்தரவுகள் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 நிறம்: மஞ்சள்
உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயமாகக் கிடைக்கும். பொறுமையும், நிதானமும் மேன்மையைத் தரும். நிலுவையில் இருந்த வேலைகளைச் சுலபமாக முடிப்பீர்கள். தொழில் நிமித்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் உருவாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். கால் பாதங்களில் சிறு வலி தோன்றலாம் கவனம். அதிர்ஷ்ட எண்: 8 நிறம்: நீலம்
