Author: Editor web1
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்காக புதுமையான யோசனைகள் மனதில் உதிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்குப் பாதைகள் தெளிவாகும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். பிள்ளைகளுக்கு சுபச் செலவுகள் செய்யும் சூழல் அமையும். வயிற்று உபாதைகள் வராமல் இருக்க உணவுக்கட்டுப்பாடு தேவை. அதிர்ஷ்ட எண்: 8 நிறம்: கருநீலம்
அனைத்துத் துறைகளிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணவரவு வந்து சேரும். வேலையில் அழுத்தம் குறைந்து மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் உடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீன ராசியில் உள்ள சனி பகவான் ஜூலை 27ம் தேதி முதல் 138 நாட்களுக்கு வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீதிக்கும், கர்மாவிற்கும் அதிபதியான சனி பகவான், இந்த ஆண்டு மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளார். ஜூலை 27 தேதி ரேவதி நட்சத்திரம் 2ம் பாதத்தில் தொடங்கும் சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சி டிசம்பர் 11ம் தேதி வரை முடிவடைகிறது. மொத்த 138 நாட்கள் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைகிறது. வக்ர பெயர்ச்சி என்பது ஒரு கிரகம் பின்னோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும் நிலையாகும். இந்த காலகட்டத்தில் சனி பகவானின் ஆற்றல் தீவிரமடைவதாகவும், பழைய கடமைகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இது ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது. கடந்த காலத்தில் செய்த வேலைகள் மற்றும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தொழில் ரீதியான தடைகள் குறையும். நிலுவையில் இருந்த…
சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் சுபமாக முடியும். அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் அல்லது எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணங்கள் செல்ல நேரிடலாம். உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பொருளாதார ரீதியாகச் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். சொல்வாக்கும், செல்வாக்கும் கூடும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கு உகந்த நாள். நிலுவையில் இருந்த வரவுகள் வசூலாகும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு கூடும். தொண்டை அல்லது கண் சார்ந்த சிறு உபாதைகள் தோன்றி மறையலாம். அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்பச்சை
சுய சிந்தனையும் சாதுரியமான பேச்சும் பெரிய நன்மைகளைப் பெற்றுத் தரும். பணியிடத்தில் கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் செய்திகள் வரும். தொழில், வியாபாரத்தில் புதிய சந்தை வாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்கள் கைக்கூடும். வணிகப் விரிவாக்கம் பற்றிய யோசனைகள் சாதகமாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட அசதிகள் வரலாம், முறையான ஓய்வு தேவை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
எதிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்; வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை இன்றைக்குத் தள்ளிப்போடுவது நல்லது. கணக்கு வழக்குகளில் விழிப்புணர்வு அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது அமைதியைத் தரும். உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. வயிற்று உபாதைகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். திறமைக்கு உரிய பாராட்டும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும் நாள். வேலையில் இருந்த தடைகள் அகலும். வேலைத்திறன் மற்றவர்களால் வெகுவாகப் பாராட்டப்படும். அரசாங்கம் சார்ந்த உதவிகள் அல்லது அனுமதிகள் எளிதில் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பழைய சோர்வு நீங்கும். அலைச்சல்களை தவிர்க்கவும். தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். பூர்வீக சொத்து சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 8 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ஆன்மீக சிந்தனைகளும், புதிய அனுபவங்களும் மன நிம்மதியைத் தரும். வெளிநாட்டுத் தொடர்புகள் அல்லது வெளியூர் வேலை வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். ஆன்லைன் வர்த்தகம் அல்லது ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் கோயில் அல்லது சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். மிதமான உடற்பயிற்சி மற்றும் நல்ல உறக்கம் புத்துணர்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
