Author: Editor web1
சூரியனும் சந்திரனும் ஒளிக் கிரகங்களாக கருதப்படுகின்றன. அவற்றில் சூரியன் நெருப்பின் சக்தியை உடையவன். சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கும் சூரியன், தன் நிலையைப் பொறுத்து மிகுந்த பலன்களை வழங்குவான். குறிப்பாக, மேஷ ராசியில் உச்சம் பெறும் போது, அவரது சக்தி பலமடங்கு அதிகரிக்கும். இதனால் அந்த காலப்பகுதியில் உஷ்ணம் அதிகரித்து, அதையே அடிப்படையாகக் கொண்டு “அக்னி நட்சத்திரம்” எனப்படும் காலம் உருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும், சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தின் 3ஆம் பாதத்தில் பயணிக்கும் போது அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அதன் பின் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தின் ஆரம்பம் வரை இது தொடர்கிறது. பொதுவாக, சித்திரை மாதம் 21ஆம் தேதி முதல் வைகாசி 13ஆம் தேதி வரை இந்த காலம் இருக்கும். அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா? பாரம்பரியமாக, இந்த காலத்தில் திருமணம், கிரகப் பிரவேசம், பந்தல் அமைத்தல், சிலை பிரதிஷ்டை போன்ற சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டும் என்று…
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றாகவும், புனிதமான நான்கு தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் வரலாறு, சிறப்புகள் குறித்த தொகுப்பை பார்க்கலாம். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாத சுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரே தலம் இதுவாகும். இது வைணவ மற்றும் சைவ ஒற்றுமைக்குச் சான்றாக விளங்குகிறது (ராமன் வழிபட்ட சிவன்). ராவணனிடம் இருந்து சீதையை மீட்கப், போர் புரிந்து ராவணனை ராமன் கொன்றார். இதன்காரணமாக ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக் கூடாது என்பதற்காகவும், ராவணனைக் கொன்ற பாவத்தை நீங்கவும் மணலால் ஆன லிங்கத்தை வைத்து ராமன் பிரதிஸ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயிலுக்கு ராமேஸ்வரம் (ராம, ஈஸ்வரம்) எனப் பெயர் பெற்றது. மூலவருக்கு ராமநாத சுவாமி என்று பெயர் பெற்றது.…
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், திருமணம் தாமதமாகலாம் அல்லது இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகலாம். மன அமைதி குறைவு, உறவில் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற பிரச்சினைகளும் தோன்றலாம். இந்த தோஷம் எந்த கிரகத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அந்த கிரகத்திற்கும் அதன் பிரத்யதி தேவதைக்கும் உரிய வழிபாடுகளைச் செய்தால், கெடுபலன்கள் குறைந்து நன்மை ஏற்படும். கிரகங்களின் தாக்கம் மற்றும் பரிகாரங்கள் குரு, சுக்கிரன்: இவர்கள் திருமண வாழ்க்கைக்கு முக்கியமான கிரகங்கள். இவர்களுக்கு வழிபாடு செய்தால் நல்ல துணைவர் கிடைத்து, இனிய இல்லற வாழ்க்கை அமையும். சூரியன்: 7ஆம் வீட்டில் நீசமாக இருந்தால் திருமணம் தாமதமாகும். சூரியனை வழிபட்டு, சிவபெருமானை (ருத்ரன்) வணங்க வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம், கோளறு பதிகம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் நன்மை அதிகரிக்கும். சந்திரன்: சந்திரன் பலம் குறைந்து 7ஆம் வீட்டில் இருந்தால் திருமண தாமதம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் குறைகள் ஏற்படும். பௌர்ணமி நாள்களில் அம்மனை…
அகத்திய முனிவர் எங்கு எங்கு சிவபெருமானை தரிசிக்க விரும்பினாரோ, அங்கெல்லாம் அவர் மனத்தில் சிவத்தை நிலைநிறுத்தி தியானித்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் உமையுடன் திருக்காட்சி அருளினார். இதனால், அகத்தியருடன் தொடர்புடைய தலங்களில் இறைவன் “அகத்தீஸ்வரர்” என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புத்திரன்கோட்டை. இந்த அமைதியான சிற்றூரின் தொடக்கத்திலேயே அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் எழுந்தருளியுள்ளது. ஒருகாலத்தில் நித்திய பூஜைகளால் செழித்து விளங்கிய இந்த ஆலயம், இன்று பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. விசாலமான பரப்பில் இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இந்தக் கோயிலின் முகப்பில் காணப்படும் திண்ணைகள், அதன் பண்டைய தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆலயத்தின் மிகப்பெரிய சிறப்பு கல்வெட்டுகளே. பல காலகட்ட அரசர்களின் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. குறிப்பாக, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தைச் சுட்டிக்காட்டும் கல்வெட்டுகளும், மீன் சின்னங்களும் இங்கு நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நம் பாரம்பரியத்தின் மௌன சாட்சிகளாக…
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் உள்ள ஊர் ஆலங்குப்பம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர். முன்னூற்று என்ற பெயரே நாளடைவில் முன்னூர் என்று மருவியதாம்.இங்கே ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅருளாளப் பெருமாள். முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட நல்லியக்கோடன் எனும் மன்னனின் வேண்டுதலுக்கு இரங்கி, அவனது ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களையும் பொருட்டு அவனுக்கு நேரடியாக அருளியவர் என்பதால் இப்படியரு திருப்பெயராம். மேற்கு நோக்கி அருளும் ஸ்வாமியை, அரவத்தை அணிகலனாகக் கொண்ட கருடாழ்வார் வணங்குவது போன்ற அமைப்பு, இந்தத் தலத்தின் சிறப்பு. இங்கே தனிச்சந்நிதியில் யோக பீடத்தில் சுயம்புவாக அருள்புரியும் ஸ்ரீயோக நரசிம்மரும் சிறந்த வரப்ரசாதி. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கோயில் திருப்பணிகள் நடந்த வேளையில், பூமியில் இருந்து வெளிப்பட்டவர் இந்த யோக நரசிம்மர். அன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் என்பதாலும், பிரதோஷ வேளையில் திருவிக்கிரகத் திருமேனி கிடைத்ததாலும் ‘இந்த யோக…
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை நிர்ணயிப்பதில் “தசா புத்தி” கணக்கீடுகள் மிக முக்கியமானவை. ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையை விட, அந்த கிரகங்களின் ஆதிக்கம் எப்போது ஏற்படும் என்பதைத் தீர்மானிப்பதே தசா புத்தி ஆகும். தசா புத்தி.. ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என ‘விம்சோத்தரி’ தசா முறை கூறுகிறது. இந்த 120 ஆண்டுகளை ஒன்பது கிரகங்களும் பிரித்து ஆட்சி செய்கின்றன. ஒரு கிரகத்தின் நீண்ட கால ஆட்சிக்காலம் ‘தசா’ என்றும், அதற்குள் வரும் மற்ற கிரகங்களின் குறுகிய கால உட்பிரிவுகள் ‘புத்தி’ என்றும் அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் தசா கால அட்டவணை.. ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட ஆண்டுகள் தசா காலமாக ஒதுக்கப்பட்டுள்ளது: தசா புத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஒருவர் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமே ஒருவரின் முதல் தசா (ஜன்ம தசா) ஆகும். உதாரணமாக, ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில்…
2026 மே மாதத்தில் முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரன்மற்றும்சூரியன்தங்களின்நிலைகளைமாற்றுகின்றனர். மே 11ம் தேதி செவ்வாய்தனதுசொந்தவீடானமேஷராசிக்குச்செல்வதுபலராசிகளுக்குத்துணிச்சலையும்புதியமாற்றங்களையும்தரும். 12 ராசிகளுக்கான மே மாத சுருக்கமான பலன்கள் இதோ: மேஷம் மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால், உங்களிடம் மிகுந்த ஆற்றலும் தன்னம்பிக்கையும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவினாலும், அவசரப்பட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ரிஷபம் நிர்வாகத் திறமை கூடும். நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண காரியங்கள் கைகூடும். தேவையற்ற பயணங்களால் செலவுகள் ஏற்படலாம். மிதுனம் கவர்ச்சியும் செல்வாக்கும் கூடும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வருமானத்தைப் பெருக்கப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் விஷயங்களில் பெற்றோரின் சம்மதம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடகம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி…
பராபல ஆண்டு 2026 ஜூன் 2, வைகாசி 19ம் தேதி குருப் பெயர்ச்சி நிகழ்கிறது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். கடகம் குருவிற்கு உச்ச வீடு என்பதால், இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சுப பலன்களை வாரி வழங்கும். மேஷம்: குரு 4-ம் இடத்திற்கு வருவதால் சொத்துச் சேர்க்கை உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ரிஷபம்: குரு 3ம் இடத்திற்கு வருவதால் தைரியம் கூடும். இளைய உடன்பிறப்புகள் மூலம் உதவி கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டு. மிதுனம்: குரு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு வருவதால் நிதி நிலைமை சீராகும். பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடகம்: ஜென்ம குருவாக இருந்தாலும், குரு உச்சம் பெறுவதால் ஆளுமைத் திறன் கூடும். கௌரவம், அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். சிம்மம்:…
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பூர் அருகே அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணியுடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் தங்களது பாவக்கணக்குகள் குறைக்கப்படும் என நம்பப்படுவதால் சித்திரகுப்தரை தரிசிக்க பக்தர்கள் ஆர்வமுடன் திரண்டனர். இதனால் கோயில் முன்பாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்திரகுப்தரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மாநகருக்குள் வந்தடைந்த கள்ளழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை அளித்து தரிசனம் செய்தனர்.…
