Author: Editor web1
தைரிய வீரிய ஸ்தானம் வலுவடைவதால், நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் உங்களுக்குப் பிற்காலத்தில் பெரிய லாபத்தைத் தரும். அண்டை வீட்டாருடன் இருந்த எல்லைப் பிரச்சினைகள் சுமூகமாக முடியும். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான சிறிய உபாதைகள் வந்து நீங்கும்; பெரிய பாதிப்பு இல்லை. பரிகாரம்: ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: வான நீலம் / ஊதா அதிர்ஷ்ட எண்: 5, 8
தன ஸ்தானம் (இரண்டாம் இடம்) உச்ச பலம் பெறுவதால், இன்று தனலாபம் சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை கூடும். இனிய சொற்களின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாளாக இருக்கும். முகத்தில் பொலிவும் மனதில் தெளிவும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றிய திட்டமிடல் தொடங்கும். கொடுத்த கடன்கள் வட்டியுடன் வசூலாகும் வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பற்கள் அல்லது தாடை பகுதிகளில் லேசான வலி வரலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். பரிகாரம்: குரு பகவானை மனதார நினைத்து வழிபடவும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7
தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரகக் கோயில்கள் மனிதனின் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களை நீக்கி, நல்வாழ்வு அருளும் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களாகும். இவை அனைத்தும் தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் (காவிரி டெல்டா) மாவட்டங்களைச் சுற்றியே அமைந்துள்ளன. கும்பகோணத்தை மையமாகக் கொண்டு இந்த ஒன்பது கோயில்களையும் தரிசிக்கலாம். ஒன்பது நவக்கிரகக் கோயில்கள், அவற்றின் இருப்பிடம் மற்றும் சிறப்புகள் பற்றிய விரிவான விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: சூரியன் (Sun) – சூரியனார் கோவில் முக்கிய தெய்வம்: சிவபெருமான் (காசி விஸ்வநாதர்), ஆனால் சூரிய பகவானுக்குத் தனிச் சந்நிதி மற்றும் கோபுரம் உண்டு. அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ (ஆடுதுறைக்கு அருகில்). சிறப்பு: மற்ற கோயில்களில் நவக்கிரகங்கள் நின்ற கோலத்தில் இருப்பார்கள். ஆனால், இங்கு மட்டுமே சூரிய பகவான் தனது இரு மனைவியரான உஷா மற்றும் பிரத்யுஷாவுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். மேலும், மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கியே…
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது மகா விஷ்ணுவின் வழிபாட்டிற்குரிய மிக மிக சக்திவாய்ந்த, அபூர்வமான புண்ணிய காலமாகும். பெருமாளுக்கு உகந்த விரத காலமான ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியமான காலமாகும். அந்த ஏகாதசிக்கு இணையான, பல ஏகாதசி விரதம் இருந்த பலனை தரக் கூடிய காலம் விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வரும் இந்தத் திருநாளில் விஷ்ணுவை வழிபடுவது கோடான கோடி புண்ணியங்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வருடம் முழுவதும் பல விரத நாட்கள் அமைந்தாலும் குறிப்பிட்ட சில நாட்கள் மிக அதிகமான புண்ணிய பலன்களை தரக் கூடியதாக அமையும். அப்படி ஒரு விரத காலம் தான் விஷ்ணுபதி புண்ணிய காலம். இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் பற்றிய விரிவான ஆன்மிக மற்றும் ஜோதிடத் தகவல்களை பார்க்கலாம். ஜோதிட ரீதியாக விஷ்ணுபதி என்றால் என்ன? சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை நாம்…
தமிழ் நாள்காட்டியின்படி பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு அமாவாசை மற்றும் ஒரு பௌர்ணமி வருவதுதான் வழக்கம். ஆனால், கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் திதிகளின் கால அளவு மாற்றங்களால், அரிதாக ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசை திதிகள் வருவதுண்டு. இந்த வருடம் வைகாசி மாதத்தில் (மே 16 – ஜூன் 14) இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இது ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. 2 அமாவாசைகள் வரும் தேதிகள் மற்றும் நேரங்கள் வைகாசி மாதத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் என இரண்டு அமாவாசை திதிகள் அமைகின்றன. முதல் அமாவாசை (வைகாசி 2) மே 16, 2026 (சனிக்கிழமை) திதி நேரம்: மே 15 அன்று அதிகாலை 03:58 மணிக்குத் தொடங்கி, மே 16 அன்று அதிகாலை 02:09 மணிக்கு நிறைவடைகிறது. இந்த அமாவாசை சனிக்கிழமையுடன் இணைந்து வருவதாலும், வட மாநிலங்களில் இந்நாளில் சனி…
வைகாசி மாதம் பிறப்பை ஒட்டி, முருகன் மற்றும் சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் கோ பூஜை நடைபெற்றது. மாசிலாமணி நிலையத்தில் நடந்த கோ பூஜையில் தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு படுமாட்டிற்கு பழங்கங்கள், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வலம் வந்தனர். இதேப்போல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த விநாயகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவாரத் திருப்பதிகங்கள் பாடி…
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியான பூண்டி அன்னையின் ஆடம்பர தேர்பவனி வியாழக்கிழமை (மே. 14) இரவு நடைபெற்றது. பூண்டிமாதா பேராலயத்தில் நிகழாண்டு பெருவிழா 6ஆம் தேதி புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு அருட்தந்தையர் நிறைவேற்றினர். வியாழக்கிழமை பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தையர் வி.எஸ்.லூர்துசேவியர், இராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூசைகள் நிறைவேற்றப்பட்டது. மாலை 6.00 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் அ.ஜீவானந்தம் தலைமை ஏற்று கூட்டுப்பாடல் திருப்பலிபூசை நடத்தி, மறையுரையாற்றி, ஆசி வழங்கி, இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி துவக்கிவைத்தார். குடியிருந்த மக்கள் பூண்டி மாதாவே வாழ்க, அன்னையே வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். தேர் பவனியில் கும்பகோணம் மறைமாவட்டமுதன்மை குரு எம்.பிலோமின்தாஸ், மறைமாவட்ட பொருளாளர் ஜெ.அந்தோனிஜோசப், மைக்கேல்பட்டி மறை…
வைகாசி விசாக மாதத்தில் அறுபடை வீடுகளின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.. 1. திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். மதுரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம் திருக்கோயில். சூரபத்மனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தேவர்களை அந்த அசுரனை வதம் செய்து விடுவித்தார் முருகபெருமான். அதற்கு நன்றி செலுத்தும் இதமாக தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்படி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்பு மிக்க தலம் இது. இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார் முருகப் பெருமான். 2. திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் திருத்தலம் திருச்செந்தூர். தூத்துக்குடியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர். மேலும் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரே திருக்கோயிலும் இதுதான். பொதுவாக முருகனின் கோயில்கள் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கும். ஆனால் திருச்செந்தூர் திருத்தலம் சமதளத்தில்…
வைகாசி விசாகம் என்பது தமிழ் மாதமான வைகாசியில், விசாக நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிவரும் நன்னாளில் முருகப்பெருமானின் அவதார தினமே வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. முருகன் எப்படி அவதரித்தார்? சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அக்னி பிழம்பாகத் தோன்றி, சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாகப் பிறந்து, பார்வதி தேவியால் இணைக்கப்பட்டு, 6 முகங்களுடன் முருகன் அவதரித்த நாளே வைகாசி விசாகம். இந்த வைகாசி தினத்தன்று ஒவ்வொரு முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதணைகளும் நடைபெறும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம். இந்த நாளில் பிறந்ததால் முருகனுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. வி என்றால் பறவை. சாகன் என்ரால் பயணம். மயில் மீது பயணம் செய்யக் கூடிவர் என்றும் பொருள்படும். இந்த வைகாசி தினத்தன்று அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் விஷேஷமாக நடைபெறும். வைகாசி விசாகத்தில் முருகனின்…
மயிலாடுதுறை அருகே வரகடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமி என்கிற ஸ்ரீ வருந்தீஸ்வரர் கோயில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமி என்கிற ஸ்ரீ வருந்தீஸ்வரர் கோயில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 12 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதனை நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூரணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேலதாள வாக்கியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க சிவாச்சாரியார்கள்…
