Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»வைகாசி விசாகம் என்றால் என்ன? ஏன் வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த நாள்?
Featured

வைகாசி விசாகம் என்றால் என்ன? ஏன் வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த நாள்?

Editor web1By Editor web1May 14, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
5 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வைகாசி விசாகம் என்பது தமிழ் மாதமான வைகாசியில், விசாக நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிவரும் நன்னாளில் முருகப்பெருமானின் அவதார தினமே வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது.

முருகன் எப்படி அவதரித்தார்?

சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அக்னி பிழம்பாகத் தோன்றி, சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாகப் பிறந்து, பார்வதி தேவியால் இணைக்கப்பட்டு, 6 முகங்களுடன் முருகன் அவதரித்த நாளே வைகாசி விசாகம்.

இந்த வைகாசி தினத்தன்று ஒவ்வொரு முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதணைகளும் நடைபெறும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம். இந்த நாளில் பிறந்ததால் முருகனுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. வி என்றால் பறவை. சாகன் என்ரால் பயணம். மயில் மீது பயணம் செய்யக் கூடிவர் என்றும் பொருள்படும்.

இந்த வைகாசி தினத்தன்று அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் விஷேஷமாக நடைபெறும். வைகாசி விசாகத்தில் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

வைகாசி விரத முறை..!

முருகன் அவதரித்த நன்னாளான வைகாசி விசாகத்தன்று, விரதமிருப்பது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாக தினத்தன்று பிரம்ம முகூர்த்தமான 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து முருகப் பெருமானை வழிப்பட வேண்டும்.

முருகனின் படத்திற்கு பூக்களைச் சாற்றி, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், பால், பழங்கள், மோர், பானகம் போன்றவற்றை முருகனுக்கு படைத்து வழிபடலாம்.

நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பது சாலச் சிறந்தது. முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு மற்ற நேரங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

வைகாசி விசாகத்தன்று மோர், தயிர்சாதம், குடை, செருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது புண்ணியம் தரும்.

வைகாசி விசாக விரதத்தின் பலன்கள்..!

வைகாசி விசாகத்தன்று மேற்கொள்ளும் விரத்தத்தின் மூலம், நம்மைத் துரத்தும் பகை விலகும், ஆபத்துகள் அகலும், தீய விளைவுகள் குறையும்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், அடுத்த வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு உண்டாகும் என நம்பிக்கை.

வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு பால் குடம் எடுத்தல், அபிஷேகம் செய்தல் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக தள்ளிப் போன திருமணங்கள் உடனே நடைபெறும்.

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும், வம்சம் விருத்தியாகும், செல்வ நிலை உயரும்.

முருகப்பெருமானின் அருளால் அனைவருக்கும் தைரியம், ஞானம் மற்றும் மன அமைதி கிடைக்கட்டும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமயிலாடுதுறை : 14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு..! திருவிழாக் கோலம் பூண்ட வருந்தீஸ்வரர் கோயில்..!
Next Article அறுபடை வீடுகளின் வரலாறு தெரியுமா?
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.