Author: Editor web1

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மகரம் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும் வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தி வரலாம். மனதில் இருந்த கவலைகள் மறைந்து உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், கருப்பு அதிர்ஷ்ட எண்: 4, 8

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – தனுசு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – விருச்சிகம் யோகமான நாள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரலாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டிப் பாராட்டுப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு, வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3, 9

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – துலாம் நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கூடுதல் வேலைப்பளு இருக்கும். குறித்த நேரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுச் செயல்படுங்கள். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 6, 8

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கன்னி உங்களின் திறமை வெளிப்படும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். துணையுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மரகத பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 6

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – சிம்மம் இன்று கொஞ்சம் அலைச்சல்கள் இருந்தாலும் முடிவில் ஆதாயம் கிடைக்கும். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்குச் சாதகமான தகவல் வரலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம், அஜீரணக் கோளாறுகள் வர வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 5

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கடகம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கலாம். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி, முத்து வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 4

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மிதுனம் புதிய திட்டங்களைச் செயல்படுத்த இன்று உகந்த நாள். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகைகள் இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள் உபாதைகள் குறையத் தொடங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 5

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – ரிஷபம் பொறுமை தேவைப்படும் நாள். பேச்சில் நிதானம் இருந்தால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். எதிர்பாராத செலவுகள் வரக்கூடும், சிக்கனம் தேவை. போட்டிகள் இருந்தாலும் கடின உழைப்பால் சமாளிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் ஜாக்கிரதை. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7

Read More

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மேஷம் இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடைப்பட்டிருந்த காரியங்கள் வேகம் எடுக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 9

Read More