Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பக்தர்கள் தலையால் மூழ்கிய மதுரை..! பச்சை பட்டாடை உடுத்தி வீதியுலா வந்த அம்மன்..!
Featured

பக்தர்கள் தலையால் மூழ்கிய மதுரை..! பச்சை பட்டாடை உடுத்தி வீதியுலா வந்த அம்மன்..!

Editor web1By Editor web1April 29, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
004 solingar koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளில் மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரையை அடுத்த அழகர் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை விழாக்களை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ம் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. தொடர்ந்து சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.

விழாவின் 11-ம் நாளில் மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இசை வாத்தியங்கள் முழங்கியப்படி, லட்சக்கணக்கான பக்தர்களின் அரகாரா முழக்கம் விண்ணைப் பிளக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்
Next Article திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் மனமுருகி சிறப்பு பிரார்த்தனை
Editor web1
  • Website

Related Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.