Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»மதுரை மாநகர் வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை!- சித்திரைத் திருவிழா கோலாகலம்!
திருவிழா

மதுரை மாநகர் வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை!- சித்திரைத் திருவிழா கோலாகலம்!

Editor web1By Editor web1April 30, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
WhatsApp Image 2026 04 30 at 7.44.47 AM
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் வந்தடைந்த கள்ளழகருக்கு திரளான பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.

சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.

இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 18ம்படி கருப்பண சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கங்கள் எழுப்பி பரவசமடைந்தனர்.

இன்று (30.04.2026) காலை மதுரை மாநகருக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை அளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோயிலை அடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை (01.05.2026) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் நடைபெற உள்ளது. தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தரும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப நிவர்த்தி அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோல நிகழ்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3ம் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது. 4ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 5ம் தேதி அழகர்மலையை அடைகிறார். 6ம் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!
Next Article பூலோக வைகுண்டம்: காவிரிக்கரையில் ரங்கநாதரின் பிரம்மாண்டம்!
Editor web1
  • Website

Related Posts

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.