Author: Editor web1
திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். தேவையில்லாத சிந்தனைகளைக் குறைத்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு கவனக்குறைவும் கூடாது. போட்டி பொறாமைகளைத் தாண்டியே முன்னேற வேண்டியிருக்கும். நிதானமான அணுகுமுறை அவசியம். சக பணியாளர்களிடம் தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்கவும். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சனைகளை தவிர்க்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்த நாள். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியளிக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்தி வரலாம். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவுகள், நண்பர்களிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் வரும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
தொலைதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையும். புதிய முதலீடுகளுக்கு உகந்த நாள். வெளிநாட்டுத் தொடர்புகளால் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் வழியில் ஆதரவு பெருகும். வேலை நிமித்தமான பயணங்கள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
பொறுமையைக் கையாள வேண்டிய நாள். பயணங்களின் போது கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல்-வாங்களில் எச்சரிக்கை அவசியம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பொறுமையுடன் செயல்பட்டு வேலையை முடிக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழில் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த பண வரவு இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பணியிடத்தில் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உணவு கட்டுப்பாடு தேவை. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் சூழல் அமையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வந்து சேரும். பணியிடத்தில் இருந்த அழுத்தம் குறையும். அரசு சார்ந்த நிலுவையில் இருந்த கோப்புகள் விரைந்து பரிசீலிக்கப்படும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு 42-ம் ஆண்டு தீ மிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு வாசனை அபிஷேகப் பொருட்கள் மற்றும் 15 வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உலக நன்மைக்காக யாக வேள்வி வளர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்புடன் திகழவும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், 108 திருவிளக்கு பூஜை செய்து அம்மனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தும் நிகழ்வும், கூழ்வார்த்தல் விழாவும் நடைபெற்றது. பின்னர், அருகிலுள்ள திருக்குளத்தில் இருந்து கரகம் வர்ணிக்கப்பட்டு, கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தது. அப்போது வீடுகள் தோறும் ஏராளமான பொதுமக்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி அம்மனை வரவேற்றனர். திருவிழாவின் சிகர நிகழ்வாக,…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்திமிகு சாணாத்தி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி முறைப்படி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக கணபதி பூஜை, கோ பூஜை, விசேஷ யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வேத பண்டிதர்கள் முழங்கிய வேத மந்திரங்களுடன் பக்திப்பூர்வமாக நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, நிர்ணயிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கப் புறப்பாடாயின. பின்னர், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள ஸ்ரீ சக்திமிகு சாணாத்தி அம்மன் திருவுருவ சிலைக்கும் புனித நீராட்டம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் முறைப்படி நிறைவு பெற்றது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு மலர்…
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு அருள்மிகு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, இந்த ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வருகிற 27-ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க உற்சவ அம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோயில் கொடிமரம் அருகே அம்மன் எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் இசைக்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர். இந்தத் திருவிழாவில், நாளை முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, வரும் 27-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்குத்…
