Author: Editor web1

மனதில் குழப்பமான சூழல் நிலவலாம். இருப்பினும், விடாமுயற்சியால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய நட்பு கிடைக்கும். மாலை நேரத்தில் மன அமைதிக்காகச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

Read More

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் கவலைகள் நீங்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், ஆனி அமாவாசை தினமான நேற்று (ஜூலை 14) அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், தயிர், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் பல வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மன் ‘ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் இரவு 11 மணியளவில் தொடங்கியது. உற்சவர் அம்மனைத் தங்களது தோள்களில் சுமந்து, வடக்கு வாயில் எதிரே உள்ள ஊஞ்சல் மேடைக்குக் கொண்டு வந்தனர். அம்மனை…

Read More

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இத்திருத்தலம், புகழ்பெற்ற ஒரு திருமணப் பரிகாரத் தலமாகும். இங்கு வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிக் கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, உற்சவமூர்த்தி முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை தாயாருக்கு அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், மணமக்களான முருகப்பெருமானுக்கும் தாயாருக்கும் பச்சை மற்றும் சிகப்பு நிற பட்டு ஆடைகள் சாத்தப்பட்டு, வண்ண மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத கோயில்…

Read More

ஆனி பிரம்மோற்சவ விழாவின் 6வது நாள் உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். உலகப் புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா, கடந்த ஜூலை 8-ம் தேதி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில், தினந்தோறும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவது வழக்கமாகும். பிரம்மோற்சவத்தின் 6வது நாள், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத்…

Read More

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், முதியவர்கள் எளிமையாகவும் விரைவாகவும் சுவாமியை தரிசனம் செய்ய ஆந்திர அரசு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வெறும் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடிக்கும் வகையில் “இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை” ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை முதியவர்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (உதாரணமாக ஆதார் அட்டை) மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் (S-1) காண்பிக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்திற்கு கீழ் உள்ள மண்டபத்தின் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் முதியவர்கள்…

Read More

பஞ்சபூதத் தலங்களில் ‘நிலம்’ தத்துவத்திற்கு உரியதாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், புதிதாகச் செய்யப்பட்ட தங்கத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக சுமார் ரூ.30 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு, ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக 25 அடி உயரம், 13 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்தில், அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் இந்த தங்கத்தேர் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு தங்கத்தேரோட்ட விழாவில், ஏலவார்குழலி அம்மையாருடன் சோமாஸ்கந்தர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் முதன்முறையாக புதிய தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்தநிகழ்வில் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும்…

Read More

முயற்சிகள் கைகூடும். உடலிலும், மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். பித்த உபாதைகள் குறையும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Read More

திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். வீண் அலைச்சல்கள், செலவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை அறவே தவிர்க்கவும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் தாமதமாகவே கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொள்வது அவசியம். உறவினர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற சிறு தொல்லைகள் வந்து போகலாம். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

தொழில், வியாபாரத்தில் லாபங்கள் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். லாபம் இரட்டிப்பாகும். வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். காதலிப்பவர்களுக்குள் புரிதல் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மன உளைச்சல் நீங்கி நிம்மதி காண்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read More