Author: Editor web1
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள். தாமதமான பணம் வசூலாகும். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். அஸ்வினி: வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பரணி: புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபச் செய்திகள் வரும். கார்த்திகை (1-ம் பாதம்): பிறருடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் சக ஊழியர்களுடன் அமைதி காப்பது முக்கியம். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9
சுபச் செலவுகள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். தொழில் ரீதியான பயணங்கள் சாதகமான பலனைத் தரும். கார்த்திகை (2, 3, 4 பாதங்கள்): முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். ரோகிணி: நினைத்த காரியங்கள் மிக எளிதாக முடியும். சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். மிருகசீரிடம் (1, 2 பாதங்கள்): கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 6
நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெரிய பக்கபலமாக இருக்கும். நீண்ட தூரப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். மிருகசீரிடம் (3, 4 பாதங்கள்): பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் கைகூடும். திருவாதிரை: பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புனர்பூசம் (1, 2, 3 பாதங்கள்): தனித்திறமைகள் வெளிப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 5
தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த கவனச் சிதறல்கள் குறையும். பண வரவு திருப்தியாக இருக்கும். முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் (4-ம் பாதம்): ஆரோக்கியப் பிரச்சனை நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பூசம்: திருமணப் பேச்சுவார்த்தைகள் நல்ல படியாக முடியும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். ஆயில்யம்: கடன் தொல்லைகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2
மனதில் புதிய தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. பண வரவு திருப்தியாக இருக்கும். உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப காரியங்களுக்கான திட்டமிடல்கள் வெற்றியைத் தரும். மகம்: முயற்சிகள் கைகூடும். சமூகத்தில், வெளிவட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பூரம்: கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உத்திரம் (1-ம் பாதம்): தந்தையின் ஆரோக்கிய பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு காரியங்கள் தடையின்றி முடியும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1
ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. நிதானம் தேவை. பேசும் வார்த்தைகளில் கடுமையை காட்ட வேண்டாம். மன அமைதிக்கு தியானம் செய்வது சிறந்தது. தொழில், வேலையில் அழுத்தமான சூழல் இருக்கும். உத்திரம் (2, 3, 4 பாதங்கள்): மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் அலைச்சல்கள் வரலாம். அஸ்தம்: வரவை விடச் செலவுகள் அதிகரிக்கலாம். திட்டம் போட்டு செய்தால் செலவுகளை தவிர்க்கலாம். சித்திரை (1, 2 பாதங்கள்): உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை மாற கடின உழைப்பு அவசியம். அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5
பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பழைய கடன்கள் வசூலாவதற்கான வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சாதிப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சித்திரை (3, 4 பாதங்கள்): புதிய நபர்களின் நட்பு புதிய பாதையைக் காட்டும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். சுவாதி: வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி நல்ல செய்தி வந்து சேரும். விசாகம் (1, 2, 3 பாதங்கள்): வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு (Pink) அதிர்ஷ்ட எண்: 7
மன அமைதியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும், ஆலோசனையும் தொழிலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த அரசு காரியங்கள் எளிதாக முடியும். விசாகம் (4-ம் பாதம்): பழைய நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அனுஷம்: வேலையில் பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்த விஷயங்கள் நீங்கும். கேட்டை: தாய் வழி உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். மனக் குழப்பங்கள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3
பொருளாதார ரீதியாக சிறந்த நாளாக அமையும். வாராக் கடன்கள் வசூலாகும். புதிய தொழில் முதலீடுகளைச் செய்ய சரியான நேரம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகப் பயணங்களுக்கான எண்ணங்கள் மேம்படும். மூலம்: வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய நினைத்த எண்ணம் கைகூடும். பண வரவு திருப்தி தரும். பூராடம்: ஆன்மீகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. உத்திராடம் (1-ம் பாதம்): பிள்ளைகளின் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3
விடாமுயற்சியால் வெற்றிகளைக் குவிக்கும் நாள். பணியிடத்தில் நீண்ட நாட்களாக இருந்த வேலைப்பளு குறைந்து நிம்மதி காண்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி நல்ல செய்தி வந்து சேரும். உத்திராடம் (2, 3, 4 பாதங்கள்): நீண்ட நாள் நோய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலும், மனமும் சுறுசுறுப்பாகும். திருவோணம்: உறவினர்கள் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சுப காரிய பேச்சுகள் சுமுகமாக முடியும். அவிட்டம் (1, 2 பாதங்கள்): புதிய சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு கைகொடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் அதிர்ஷ்ட எண்: 8
