Author: Editor web1
நினைத்த காரியங்கள் நிறைவேறும் சிறப்பான நாள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அரசியல் தொடர்பில் உள்ளவர்களின் முயற்சியில் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு கைகொடுக்கும். நிதிப் பற்றாக்குறைகள் நீங்கும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுகள் நனவாகத் தொடங்கும். உதவித்தொகை கிடைக்க வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட எண்: 3, 1 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை அமையும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்குத் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஐடி (IT), இன்ஜினியரிங் மற்றும் கணக்கியல் துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட எண்: 8, 5 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் கைகூடும். மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் வேலைப் பளு குறைந்து, சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கம். மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் திருப்புமுனை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தப் புதிய தளங்கள் அமையும். அதிர்ஷ்ட எண்: 8, 2 அதிர்ஷ்ட நிறம்: நீலம்
பிற்பகல் வரை எடுத்து செய்யும் காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். மாலைக்கு மேல் சாகதமான சூழல் அமையும். சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வேலையில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. மாலைக்கு பிறகு பணிச்சுமை குறையும். படிப்பில் மந்தநிலை இருந்தாலும், மாலைக்கு மேல் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளும். கவனச் சிதறல் இல்லாமல், கடின உழைப்பால் மட்டுமே தேர்வுகளில் சாதிக்க முடியும். அதிர்ஷ்ட எண்: 3, 7 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதி கோயிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அம்மணம்பாக்கம் நடுக்கண்டிகை பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பூங்காவனத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதி கோயில்கள் கிராமமக்கள், பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17-ம் தேதி ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து கிராம தேவதையான ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் கிராமமக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை காட்டி வழிபட்டனர். 18-ம் தேதி பந்த கால் நடும் விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து கணபதி ஹோமம், கோ பூஜை, லஷ்மி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. யாக பூஜைகள் நடந்து முடிந்த…
புதிய முயற்சிகள், முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். வெளிவட்டாரத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் உறவுகளிடம் விவாதங்களில் அமைதி காப்பது நன்மை தரும். உதவிகள் வந்து சேர தாமதமாகலாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை, தவறுகள் நேர வாய்ப்புள்ளது. நாள் முழுவதும் அமைதியாக இறைவனை தியானிப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளம் சிவப்பு
நன்மைகளும், மகிழ்ச்சியுமான சூழல்கள் உண்டாகும். பழைய பொருளாதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறவுகள் இடையே அன்யோன்யமும், ஒற்றுமையும் பலப்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழிலுக்காக வெளியூர் அல்லது வெளிமாநிலப் பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். சிவன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம்
நீண்ட தூரப் பயணங்களால் அலைச்சலும், காரிய வெற்றியும் உண்டாகும். உறவுகளின் செயல்களால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளை குறைத்தால் வருத்தங்களை தவிர்க்கலாம். அலுவலகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருமாள் வழிபாடு சிறப்பைத் தரும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8 அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கருநீலம்
தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவைத் தொகைகள் கைக்கு வர வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடையின்றி நகரும். உறவினர்களிடையே மதிப்பு கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் வேலைச்சுமை அதிகரிக்கலாம், கூட்டு வியாபாரத்தில் லாபம் உயரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் சாற்றி வழிபடவும் விரும்பியது நிறைவேறும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள்
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் வந்து சேரும். வியாபாரத்தில் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. அனுமன் சாலிசா பாராயணம் செய்யவது நினைத்த காரியத்தை நிறைவேற்றும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, மஞ்சள்
