Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»மேல்மலையனூரில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்..! பக்தி பரவசத்துடன் பக்தர்கள்..!
Featured

மேல்மலையனூரில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்..! பக்தி பரவசத்துடன் பக்தர்கள்..!

Editor web1By Editor web1May 17, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
4 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

விழுப்புரம் மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்திப் பெருக்கோடு வெகு விமரிசையாக நிறைவடைந்தது.

வைகாசி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை முதலே மேல்மலையனூர் கோவில் வளாகம் ஆன்மீக அதிர்வுகளால் நிறைந்திருந்தது. நடை திறக்கப்பட்டவுடன் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், ஜொலிக்கும் தங்கக் கவசத்தாலும் அம்மன் பேரெழிலோடு காட்சியளித்தார். சர்க்கரைப் பொங்கல், சுண்டல் மற்றும் பலவகை பழங்கள் படைக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அதிகாலை முதலே நீண்ட நெடிய வரிசையில் பொறுமையோடு காத்திருந்த பக்தர்கள் அம்மனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு உருகினர். உற்சவர் அங்காளம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார். நாள் முழுவதும் விரதமிருந்து இரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அலைகடலெனத் திரண்டிருந்தனர்.

இரவு 11 மணியளவில் பூசாரிகளின் பாரம்பரிய முறைப்படி உற்சவர் அங்காளம்மன் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது பூசாரிகள் தாலாட்டுப் பாடி தீபாராதனை காட்ட , திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கைகளில் நெய் தீபம் ஏந்தி ஓம் சக்தி அங்காளம்மா என எழுப்பிய பக்தி முழக்கம் ஒட்டுமொத்த மேல்மலையனூரையும் விண்ணதிரச் செய்தது.

பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பாதுகாப்புப் பணியில் 600 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நெரிசலைக் கட்டுப்படுத்த முறையான தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன.

சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டன. கோவில் உதவி ஆணையர், அறங்காவலர் குழுவினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவைகாசி விசாகத் திருவிழா: களை கட்டிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
Next Article 5ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.