Author: Editor web1

கர்நாடக மாநிலம், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சவுபர்ணிகா நதிக் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் திருக்கோயில். அம்மனின் சக்தி பீடங்களில் ஒன்றான கொல்லூர் தலம், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருத்தலம், கலைகளின் அதிபதியான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒருங்கிணைந்த வடிவமாகத் திகழ்கிறது. ஆதிகாலத்தில் இப்பகுதியில் ‘காமன்’ என்ற அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவம் புரிந்து, அதன் மூலம் அழியாத வரங்களைப் பெற முயன்றான். அவனது தவத்தைக் கலைக்க நினைத்த தேவர்கள், அசுரனின் எண்ணம் நிறைவேறினால் உலகிற்குப் பெரும் ஆபத்து என்று உணர்ந்து பராசக்தியிடம் முறையிட்டனர். அசுரன் முன் தோன்றிய சிவன், வரம் கேட்கச் சொன்ன அந்த நொடியில், பராசக்தி அசுரனின் நாவை முடக்கி, பேச முடியாதவாறு மாற்றினாள். இதனால் அவனுக்கு ‘மூகாசூரன்’ என்று பெயர்…

Read More

திட்டமிடாத செலவுகள் உங்களைத் திணறடிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உள்ளூர் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தூக்கமின்மை காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Read More

சந்திரன் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்வதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதமான நாளிது. அலுவலகத்தில் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் அல்லது போனஸ் தொகை கைவந்து சேரும். மேலதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்ய உகந்த நாள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து, லாபம் எதிர்பார்த்த அளவு இருக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் வழியில் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

உங்களின் உழைப்பிற்கான முழு பலனையும் அறுவடை செய்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த சலுகைகள் அல்லது உரிமங்கள் எளிதாகக் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சமூக சுப நிகழ்ச்சிகளில் முதன்மைப் பங்கெடுப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read More

சந்திரன் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். கடந்த சில நாட்களாக இருந்த வேலைப்பளு பாதியாகக் குறையும். உங்கள் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த தொழில் ஒப்பந்தங்கள் மீண்டும் உயிர் பெறும். ஆன்மீகம் மற்றும் கல்வி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

பணியிடத்தில் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. எந்த ஒரு புதிய பொறுப்புகளையும் இன்று ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய நபர்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை முற்றிலும் தவிர்க்கவும். லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினரிடம் கோபப்படாமல், பொறுமையைக் கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் போது வேகம் தவிர்க்கவும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Read More

மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுக உறவு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

Read More

இதுவரை தடங்களாக இருந்த காரியங்கள் அனைத்தும் வேகம் எடுக்கும். பணியிடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் வியாபாரத்தில் லாபமும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். ஆன்மீகப் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த நாள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

Read More

எதிலும் கூடுதல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மறுமுறை சரிபார்ப்பது நல்லது. புதிய முதலீடுகள், பெரிய வியாபார ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. அனைவரிடமும் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது வேகம் தவிர்க்கவும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Read More

இன்று மகிழ்ச்சியான மற்றும் கலகலப்பான சூழல் நிலவும். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுகளும், சில சலுகைகளும் கிடைக்கப் பெற்று மனநிறைவு அடைவீர்கள். கூட்டுத் தொழில் லாபகரமாக இயங்கும். புதிய கூட்டாளிகள் உங்களுடன் இணைய ஆர்வம் காட்டுவார்கள். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் கூடும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More