சந்திரன் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். கடந்த சில நாட்களாக இருந்த வேலைப்பளு பாதியாகக் குறையும். உங்கள் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த தொழில் ஒப்பந்தங்கள் மீண்டும் உயிர் பெறும். ஆன்மீகம் மற்றும் கல்வி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

