Author: Editor web1
கொடுக்கல்- வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது. தொழில், வேலையில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்: 6, 15, 24 அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். நண்பர்களின் உதவி இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலத் தடைகள் விலகத் தொடங்கும். இன்று உங்களுக்கு ஒரு திருப்திகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 9, 18, 27 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
வேலை இல்லாதவர்களுக்கு புதிதாக நல்ல வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்குச் சிறப்பான நாளாக அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக முடியும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட எண்: 3, 12, 21 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தொழில் போட்டிகள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் திறன் உண்டாகும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கச் சிறிது காலதாமதமாகும். கடன்களை அடைக்கப் புதிய வழிகள் பிறக்கும். பெரியோர்களின் சொல் கேட்டு நடப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 8, 17, 26 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, நீல நிறம்
புதிய முயற்சிகள் வெற்றியைத் தேதித் தரும். பொருளாதார நிலை சீராகும். எதிர்பார்த்த பண வரவு வரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நீண்ட நாள் கனவுகள், ஆசைகள் நிறைவேறத் தொடங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்சாகமான நாளாக அமையும். அதிர்ஷ்ட எண்: 8, 17, 26 அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம், ஊதா
ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமானது. நண்பர்கள், உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் நலனில் அதிக அக்கறை காட்டவும். இன்று கவனமாகச் செயல்படுவது எந்தச் சிக்கலும் இல்லாமல் நாளை கடக்க உதவும். அதிர்ஷ்ட எண்: 3, 12, 30 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
ஜாதகத்தில் 10-ம் வீடு (கர்ம ஸ்தானம்), அதன் அதிபதி மற்றும் 10-ம் பாவகத்துடன் தொடர்புடைய கிரகங்களே ஒருவரின் தொழில் அமைப்பின் சாதகம் மற்றும் பாதகத்தை தீர்மானிக்கின்றன. தொழில் மற்றும் ஜீவன ஸ்தானம் என்பது ஒருவருக்கு வாழ்வாதாரத்தையும், கவுரவத்தையும் தரும் மிக முக்கியமான பாவகம். ஒருவருக்கு தொழில் எப்போது அமையும், ராசிகள் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் என்னென்ன தொழில்கள் சாதகமாக இருக்கும் என்பது பற்றிய பார்க்கலாம். தொழில் அமையும் காலம் எப்போது? ஒருவருக்கு நிலையான வேலை அல்லது தொழில் தொடங்குவதற்கான காலம் அவருடைய ஜாதகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரகங்களின் (Transit) நிலையை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. தசா புத்தி காலம்: ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் பாவக அதிபதி, 10-ம் பாவகத்தில் அமர்ந்த கிரகம் அல்லது 10-ம் பாவகத்தைப் பார்க்கும் கிரகங்களின் தசா புத்திகள் காலங்கள் நடக்கும் போது ஜாதகருக்கு புதிதாக தொழில் அல்லது வேலை அமையும். மேலும், லக்ன…
ஜோதிடத்தில் 7-ம் பாவகம் என்பது “களத்திர ஸ்தானம்” என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு திருமணம் சார்ந்த கேள்விகளுக்கு 7-ம் பாவகத்தில் இருந்து பெறலாம். நண்பர்கள் தொடர்பு, சமூக சூழல்நிலை பற்றியும் 7-ம் பாவகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். 7-ம் பாவகத்தின் விரிவான காரகங்கள்: ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும், காதல் திருமணமா அல்லது வீட்டார் பார்த்து வைக்கும் நிச்சயித்த திருமணமா, தாம்பத்திய சுகம் எவ்வாறு இருக்கும் என்பதை 7-ம் பாவகம் தான் தீர்மானிக்கிறது. துணையின் தோற்றம், குணம், நிறம் குறித்தும் 7-ம் விளக்கும். தொழிலில் கூட்டாளிகள் அமைவார்களா, அவர்களால் லாபம் கிடைக்குமா அல்லது ஏமாற்றம் மிஞ்சுமா என்பதைக் காட்டும். அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் குறிக்கும் இடம். 7-ம் பாவகத்தின் சாதகங்கள்: 7-ம் பாவகம் வலுவாகவும், சுப கிரகங்களின் ஆதிக்கத்திலும் இருந்தால் வாழ்க்கைத் துணையின் உதவி மிகச்சிறப்பாக இருக்கும். லக்னத்திற்கு 7-ல் குரு, சுக்கிரன் அல்லது வளர்பிறை சந்திரன்…
ஒருவரின் வீரம், முயற்சி, இளைய சகோதரர்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள ஜாதகத்தில் 3-ம் பாவம் (மூன்றாம் வீடு) என்பது முக்கியமான இடமாகும். மேலும், இந்த பாவகம் உபசய ஸ்தானங்களில் (வளர்ச்சி தரும் வீடுகள்) ஒன்றாகவும் கருதப்படுகிறது. 3-ம் பாவகத்தின் காரகங்கள்: ஜாதகரின் தனிப்பட்ட திறமைகளையும், அவரைச் சுற்றியுள்ள உடனடிச் சமூக வட்டத்தையும் 3-ம் பாவகம் தான் குறிக்கிறது. இளைய சகோதர, சகோதரிகள், அண்டை வீட்டினர், தைரியம், வீரம், மன உறுதி, சுய முயற்சி, சுறுசுறுப்பு ஆகியவைகள் 3-ம் பாவகத்தை குறிக்கிறது. கையெழுத்து, ஒப்பந்தங்கள், கலைகளில் ஆர்வம் (இசை, நடனம், ஓவியம்) ஆகியவையும், ஒருவரின் எழுத்துத் திறன், பேச்சு, ஊடகம், பத்திரிக்கை, தகவல் தொழில்நுட்பம், தூது செல்லுதல், குறுகிய தூரப் பயணங்கள், இடமாற்றம், தினசரிப் பயணம் ஆகிய நிகழ்வுகளுக்கு 3-ம் பாவகத்தைதான் பார்க்க வேண்டும். கைகள், தோள்கள், மார்பின் மேல் பகுதி, காதுகள் (குறிப்பாக வலது காது), நரம்பு…
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் வாழ்வில் பொருளாதார நிலை, குடும்பம், வாக்கு மற்றும் உணவு முறை ஆகியவற்றைக் 2-ம் பாவம் (தன ஸ்தானம்) வைத்தே அறிய முடியும். அத்தகைய 2-ம் பாவகத்தின் காரகங்கள், அந்த பாவகத்தின் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள், ஒன்பது கிரகங்களும், 2-ம் பாவகத்தில் இருக்கும் போது கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம். 2-ம் பாவகத்தின் காரகங்கள்: ஜாதகரின் பணம், அசையும் சொத்துக்கள், வங்கி சேமிப்பு ஆகிய பொருளாதார சூழலை 2-ம் பாவகம் குறிக்கும். குடும்ப உறுப்பினர்கள், குடும்ப உறவு முறை, பேச்சுத்திறன், வாக்கு சாதுரியம், சொல்லும் வார்த்தைகளின் உண்மைத்தன்மை ஆகியவையும் 2-ம் பாவகத்தின் காரங்களாகும். ஒருவரின் உண்ணும் உணவு மற்றும் உணவு பழக்க வழக்கங்களும் 2-ம் பாவகத்தை வைத்தே அறியலாம். முகத்தின் பொலிவு, கண் (குறிப்பாக வலது கண்), வாய், பற்கள் பற்றியும் ஜாதகரின் தொடக்கக் கல்வி பற்றியும் அறிய 2-ம் பாவகம் முக்கியம். சாதக -…
