Author: Editor web1

பராபல ஆண்டு 2026 ஜூன் 2, வைகாசி 19ம் தேதி குருப் பெயர்ச்சி நிகழ்கிறது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். கடகம் குருவிற்கு உச்ச வீடு என்பதால், இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சுப பலன்களை வாரி வழங்கும். மேஷம்: குரு 4-ம் இடத்திற்கு வருவதால் சொத்துச் சேர்க்கை உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ரிஷபம்: குரு 3ம் இடத்திற்கு வருவதால் தைரியம் கூடும். இளைய உடன்பிறப்புகள் மூலம் உதவி கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டு. மிதுனம்: குரு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு வருவதால் நிதி நிலைமை சீராகும். பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடகம்: ஜென்ம குருவாக இருந்தாலும், குரு உச்சம் பெறுவதால் ஆளுமைத் திறன் கூடும். கௌரவம், அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். சிம்மம்:…

Read More

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பூர் அருகே அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணியுடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் தங்களது பாவக்கணக்குகள் குறைக்கப்படும் என நம்பப்படுவதால் சித்திரகுப்தரை தரிசிக்க பக்தர்கள் ஆர்வமுடன் திரண்டனர். இதனால் கோயில் முன்பாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்திரகுப்தரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது.

Read More

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மாநகருக்குள் வந்தடைந்த கள்ளழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை அளித்து தரிசனம் செய்தனர்.…

Read More

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து…

Read More

திருவாரூர் அருகே உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள்  திருக்கோயில், 108 திவ்யதேசங்களில் 16வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத் திருவிழா ஏப்ரல் 24ம் தேதி முதல் தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெற்று நிறைவடைகிறது. இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத் திருவிழாவில் திருக்கண்ணமங்கை கிராம மக்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து   தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிந்தா… கோவிந்தா… என முழக்கமிட்டு ஸ்ரீ பக்தவச்சல பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.

Read More

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் தாலுகா வீழிமங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக கோயில் பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசும் பணிகள் நடைபெற்றன. கடந்த நான்கு நாட்களாக யாகசாலை அமைத்து வேதாச்சாரியார்கள், மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இந்தநிலையில், இன்று (30.04.2026) அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் யாக சாலையை வலம் வந்து கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கலசங்களில்…

Read More

சித்ரா பவுர்ணமி என்பது ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். 2026-ம் ஆண்டு மே 1-ம் தேதி (சித்திரை 18) இத்திருநாள் அமைகிறது. சித்ரகுப்தர் வரலாறு சித்ரா பவுர்ணமியின் மிக முக்கியமான அம்சம் எமதர்ம ராஜாவின் கணக்காளரான சித்ரகுப்தரின் பிறந்தநாளாகக் கருதப்படுவதுதான். பிரம்ம தேவர் தனது மனதில் இருந்து (சித்திரத்தில் இருந்து உருவானவர் என்பது ஒரு நம்பிக்கை) சித்ரகுப்தரை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. மனிதர்களின் பாவ- புண்ணியங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்வது இவரது பணியாகும். சித்ரா பவுர்ணமி நாளில் மக்கள் சித்ரகுப்தரை வழிபட்டு, தாங்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பார்கள். இனிவரும் காலங்களில் நற்செயல்களை மட்டுமே செய்வோம் என உறுதி ஏற்பார்கள். ஆன்மிகச் சிறப்புகள் தேவர்களின் தலைவனான இந்திரன், தான் செய்த பாவங்கள் நீங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை பவுர்ணமி நாளில் லிங்கத்தை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இன்றும் மதுரையில் இந்த…

Read More

ஆன்மீகம், வரலாறு, கட்டிடக்கலை ஆகிய மூன்றுக்கும் இலக்கணமாகத் திகழும் ஒரு தலம் உண்டென்றால் அது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் தான். 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருத்தலமான இது, வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, தமிழர்களின் கலைத்திறனை உலகுக்கு பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும். காவிரி சூழ்ந்த தீவு நகரம் திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே ஒரு தீவு போல அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம். இந்தக் கோயிலின் அமைப்பு உலகிலேயே மிகவும் தனித்துவமானது. சுமார் 156 ஏக்கர் பரப்பளவில், 7 பிரகாரங்கள் மற்றும் 21 பிரம்மாண்ட கோபுரங்களுடன் ஒரு நகருக்குள்ளேயே ஒரு கோயில் அமையாமல், ஒரு கோயிலுக்குள்ளேயே ஒரு நகரம் அமைந்திருப்பதே இதன் தனிச்சிறப்பு. இராமாயணம் முதல் இன்று வரை புராணங்களின்படி, ஸ்ரீரங்க விமானம் பாற்கடலில் இருந்து தோன்றிய திருஉருவம், மகா விஷ்ணுவால் பிரம்மாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர்…

Read More

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் வந்தடைந்த கள்ளழகருக்கு திரளான பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 18ம்படி கருப்பண சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள்…

Read More

ஜோதிடம் என்பது எதிர்காலத்தை மட்டும் கூறும் ஒரு கருவி அல்ல. மனித மனத்தின் இயல்பையும், வாழ்க்கையின் நடைமுறைகளையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியல் பார்வையாகவும் அது பார்க்கப்படுகிறது. இயற்கையின் கோட்பாடுகள், கிரகங்களின் இயக்கம், மனோதத்துவம் ஆகியவை இணைந்து செயல்படும் விதத்தை ஜோதிடம் விளக்குகிறது. குறிப்பாக மனிதனின் சிந்தனை, மனநிலை மற்றும் வாழ்க்கைத் தீர்மானங்கள் மீது கிரகங்களின் தாக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை அது ஆராய்கிறது. மிதுனம் அல்லது கன்னி ராசிகளில் ஒன்றில் பிறந்த நேரத்தில் லக்னம் அல்லது சந்திரன் அமைந்து, அதே சமயம் குருவின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்த பெண், திடமான மனப்பாங்கு மற்றும் கட்டுப்பாடு கொண்டவளாக இருப்பாள் என்று ஜோதிடம் கூறுகிறது. அவளுடைய வாழ்க்கை முறையில் ஒழுக்கம், அடக்கம் மற்றும் தெளிவு முக்கிய பங்காற்றும். குடும்ப வாழ்க்கையில் கணவனிடம் கொண்ட பற்றும், நம்பிக்கையும் உறுதியானதாக இருக்கும். இந்த மனநிலை காரணமாகவே அவள் உறவுகளில் நிலைத்தன்மையையும், நேர்மையையும் கடைப்பிடிப்பாள். “ஒருவனுக்கு ஒருத்தி”…

Read More