Author: Editor web1

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணிக்கு அருகில் அமைந்துள்ள சேதுக்கரை, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலமாகும். இலங்கைக்குச் செல்வதற்காக ராமபிரான் பாலம் அமைத்த இடமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள நவக்கிரக சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. இலங்கையில் உள்ள ராவணனை வதம் செய்யச் சென்ற ராமபிரான், கடலின் குறுக்கே பாலம் அமைக்கத் திட்டமிட்ட இடம் இந்தச் சேதுக்கரை ஆகும். ராவணனை வெல்வதற்கு முன்னதாக, வெற்றியை உறுதி செய்யவும், கிரக தோஷங்கள் நீங்கவும் ராமர் இங்குள்ள மணலில் நவக்கிரகங்களை உருவாக்கிப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. ஸ்ரீராமர் இங்கு தங்கியிருந்த போதுதான் விபீஷணன், ராமரைச் சரணடைந்து தஞ்சம் புகுந்தார். இதனால் இத்தலம் ‘சரணம்’ என்ற சொல்லுடன் இணைந்து முக்கியத்துவம் பெறுகிறது. இங்குள்ள நவக்கிரகங்கள் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. மற்ற கோயில்களைப் போலல்லாமல், இங்கு நவக்கிரகங்கள் தனிச் சிறப்பு வாய்ந்த அமைப்பில் அமைந்துள்ளன. ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், திருமணத்…

Read More

கொடைக்கானலின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் மலர் கண்காட்சியைத் தொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு, குறிஞ்சி ஆண்டவர் முருகப் பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் கருவறை முதல் வளாகம் வரை மலர்களால் பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டு, ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முருகப் பெருமான் தங்கக் கவசத்தில் ஜொலிக்க, சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலில், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே கோயிலில் திரண்டனர். தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமானை தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி…

Read More

திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனீஸ்வர பகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்துடன் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சனீஸ்வர பகவான் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை…

Read More

புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் அக்னி நட்சத்திர பூஜையை முன்னிட்டு இன்று 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை இன்று நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்று முதல் புதுச் சேரியில் 6 முறை 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி,வெயில் தாக்கத் தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலை யில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு மணக்குள விநாய இதையொட்டி,மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதனையொட்டி, மணிக்கு சுவாமிக்கு 1,008 இளநீர் மணக்குள விநாயகர் அபிஷேகம் இதில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.

Read More

புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா இன்று (மே 28) அதிகாலை கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும். அத்தி வரதர் புகழ்பெற்ற தேவராஜ ஸ்வாமி என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்தநிலையில், நேற்று (மே 27) சேனை மார் புறப்பாடு தொடங்கி, இன்று (மே 28) அதிகாலை 5 மணியளவில் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத எம்பெருமான் கொடி மரம் அருகே எழுந்தருள வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பஞ்சவர்ண மாலை தங்க வைர ஆபரணங்கள் சூடி எம்பெருமான் எழுந்தருளி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.…

Read More

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ளது புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் சொரூபம் ஆலயத்தின் வளாகத்தில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. திருப்பலியைத் தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு அலங்கார பெரிய தேர் பவனி ஜூன் 6-ம் தேதி நடைபெறுகிறது.

Read More

தரங்கம்பாடி அருகே இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். கண்கவர் வானவேடிக்கை பக்தர்களை கவர்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவழா கடந்த 18 ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கிய விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மேட்டுத்தெரு, மேலத்தெரு, வடக்குத் தெரு, கீழத்தெரு, தெற்க்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வீதியுலா காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து காத்தவராயன் திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. காலையில் பால்குடம் எடுத்தல் அதனை தொடர்ந்து மாலை வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து…

Read More

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு குரு பெயர்ச்சி என்பதால் அதன் பலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வீனை ஆசிரியை ஹாஷாரவி என்பவர் அண்ணாமலையார் கோவிலில் வீனை இசை மீட்டு வழிபாடு செய்தார். குறிப்பாக நட்டாய், புகைவரணி, சண்முகபிரியா, ரேவதி உள்ளிட்ட ராகங்கள் வாசித்த பின்னர் விநாயகர், முருகர், சிவபெருமான் மற்றும் அம்மன் பாடல்களை வீணையில் வாசித்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரும் ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

Read More

நாகை அடுத்த நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு: ஈரான் அமெரிக்கா போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ பிரார்த்தனை. சௌதி அரேபியாவில் இன்று பக்ரீத்  பண்டிகை கொண்டாடபடுவதை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்  என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜாக் அமைப்பினர் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையின் போது உலக அமைதி வேண்டியும் ஈரான் அமெரிக்கா போர் முடிவுக்கு வந்து பதட்டம் தணிந்து அமைதி நிலவ பிரார்த்தனை செய்தனர்.

Read More

வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல சிறப்பு தினங்கள் மற்றும் நாட்கள் வழிபடப் படுகிறது. அந்த வகையில், இந்து மத நம்பிக்கையில் கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த நாள் கங்கா தசராவாக கொண்டாப்படுகிறது. நடப்பாண்டில் இந்த விழா நேற்று ( 25.05.2026) தொடங்கியது. அரும் 28-ம் தேதி வரை இவ்விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த புனித விழாவை ஒட்டி கங்கை மற்றும் அதன் கிளை நதியை ஒட்டிய புனித தளங்களில் மக்கள் வழிபாடு செய்து புனித நீராடுகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டு நீராடி சாமி தரிசனம் செய்தனர். புத்வ மங்கல் எனப்படும் புனித செவ்வாய்க்கிழமையை ஒட்டி, திரிவேணி சங்கமத்தின் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க லேதே கோயிலில் அனுமனை வழிபட்டனர்.

Read More