Author: Editor web1

புதிய உற்சாகம் பிறக்கும். எந்தவொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் கைகூடும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிடுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் தடங்கலின்றி கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள். பெற்றோர் வழியில் ஆதாயம் உண்டு. இல்லத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். சளி, இருமல் போன்ற நீர் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிடிவாத குணத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில்கள் லாபத்தைத் தரும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரக்கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையுடன் மனவிட்டுப் பேசுவதன் மூலம் குடும்ப ஒற்றுமை பலப்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கூடும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

Read More

எதிலும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும். புதிய நபர்களை நம்பிப் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது வேகம் தவிர்ப்பது நல்லது. வேலைச்சுமை அதிகமாக இருக்கும். புதிய முதலீடுகளையோ அல்லது முயற்சிகளையோ தள்ளிப் போடுவது நல்லது. வரவை விடச் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். கோபமான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். அஜீரணக் கோளாறுகள் அல்லது வயிற்றுத் தொந்தரவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

Read More

மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த ஊடல்கள் நீங்கும். புதிய கூட்டுத் தொழில் ஒப்பந்தங்கள் கைகூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் சக பெண் ஊழியர்களின் ஆதரவு பலமாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். காதலிப்பவர்களுக்குத் திருமண யோகம் உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

Read More

முயற்சிகளில் எதிர்ப்புகள் விலகி வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தொல்லை செய்து வந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைத் திறனில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பணியில் இருந்த அழுத்தங்கள், சக ஊழியர்களின் கருத்து வேறுபாடுகள் மறையும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து சுபச் செய்திகள் வரும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Read More

கற்பனைத் திறன் அதிகம் வெளிப்படும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமிதம் தரும். கலைத்துறை மற்றும் இலக்கியத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பூர்வ புண்ணிய பலத்தால் தொட்ட காரியங்கள் துலங்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான நல்ல செய்திகள் வரும். குடும்பத்துடன் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வீர்கள். முதுகு வலி அல்லது அஜீரணம் போன்ற சிறு பிரச்சனைகள் வந்து மறையும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read More

மனக்குழப்பங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல்நலனில் தனிக் கவனம் செலுத்தவும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அலுவலகப் பணிகளை தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடிப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் கூடும். அதனை சமாளிக்கும் அளவுக்குப் பணப்புழக்கம் இருக்கும். பிறரிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அமைதியைக் கடைப்பிடித்தால் நாள் இனிதாகும். சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். போதிய ஓய்வு தேவை. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

Read More

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். விடாமுயற்சிக்குத் தகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குறுகிய தூரப் பயணங்களால் லாபமும் மகிழ்ச்சியும் உண்டாகும். தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் கணினித் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வளர்ச்சியைத் தரும். வேலையில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பக்கத்து வீட்டாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தைகள், திட்டமிடல் நடக்கும். சுறுசுறுப்பு கூடும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Read More

பேச்சால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வேலையில் இருந்த அழுத்தங்கள் குறையும். பழைய நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்ப உறவுகளிடம் இருந்த வேற்றுமைகள் நீங்கம். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பல் வலி அல்லது தொண்டை சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் வளைகாப்பு உற்சவம் 4-ம் திருநாளான இன்று (ஜூலை 12) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காந்திமதி அம்பாளுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. வெண்பட்டு உடுத்தி அம்பாள் சன்னதி மகா மண்டபத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளை, மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, பல்வேறு வகையான சீர்வரிசை தட்டுகளுடன் சுவாமி சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு சுவாமி சன்னதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின், ஊஞ்சல்…

Read More