பேச்சால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வேலையில் இருந்த அழுத்தங்கள் குறையும். பழைய நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்ப உறவுகளிடம் இருந்த வேற்றுமைகள் நீங்கம். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பல் வலி அல்லது தொண்டை சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

