முயற்சிகளில் எதிர்ப்புகள் விலகி வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தொல்லை செய்து வந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைத் திறனில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பணியில் இருந்த அழுத்தங்கள், சக ஊழியர்களின் கருத்து வேறுபாடுகள் மறையும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து சுபச் செய்திகள் வரும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

