எதிலும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும். புதிய நபர்களை நம்பிப் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது வேகம் தவிர்ப்பது நல்லது. வேலைச்சுமை அதிகமாக இருக்கும். புதிய முதலீடுகளையோ அல்லது முயற்சிகளையோ தள்ளிப் போடுவது நல்லது. வரவை விடச் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். கோபமான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். அஜீரணக் கோளாறுகள் அல்லது வயிற்றுத் தொந்தரவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

