புதிய உற்சாகம் பிறக்கும். எந்தவொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் கைகூடும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிடுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் தடங்கலின்றி கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள். பெற்றோர் வழியில் ஆதாயம் உண்டு. இல்லத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். சளி, இருமல் போன்ற நீர் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

