உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக வார இறுதிநாட்கள், விடுமுறை நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் கடந்த 16-ம் தேதி பிற்பகலில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் சனிக்கிழமை 90,011 பேர் தரிசனம் செய்திருந்தனர். ரூ.3.76 உண்டியல் காணிக்கை வசூலானது.

அதேப் போல நேற்று 91,020 பேர் தரிசனம் செய்திருந்தனர். அவர்கள் மூலம் ரூ.3.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரமும், தரிசன டிக்கெட் இல்லாமல் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version