2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்:

ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

மிதுனம்: தன்னம்பிக்கை, தலைமைத்துவம், சமூக மரியாதையை உயர்த்தும் விதமான சாதகமான மாதமாகும். அலுவலகச் சூழல் உங்களுக்குச் சாதகமாக மாறும். புதிய திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுவது லாபத்தை அதிகரிக்கும். ஏற்றுமதி- இறக்குமதித் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு கட்சித் தலைமை உங்களை அழைத்து ஆலோசனைகள் கேட்கும் சூழல் உருவாகும். செல்வாக்கு உயரும். புகழும் அந்தஸ்தும் தேடி வரும். ஊடகங்கள், சமூக வலைதளங்களில் கவனிக்கப்படும் நபராக இருப்பீர்கள். பயணங்களால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version