உத்திரமேரூர் அருகே அழிசூர் நூக்கலம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நூக்கலம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக, ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, திரளான பெண்கள் ஆலயம் முன்பு அமர்ந்து திருவிளக்கு வைத்து தீபம் ஏற்றி உலக நன்மைக்காகவும், குடும்பம் செல்வ செழிப்புடன் திகழ்வும், மழை வேண்டியும், மாங்கல்யம் பாக்கியம் நிலைக்கவும் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
பின்னர், திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
