புதுச்சேரியில் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழாவில் நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே பழமைமிக்க  தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது.

இதன்  119-வது ஆண்டு பெருவிழா கடந்த 5ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நவ நாட்களில் காலை மாலை இரு வேளையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான  ஆடம்பர தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தூய இருதய ஆண்டவரை  வழிபட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version