மீன ராசியில் உள்ள சனி பகவான் ஜூலை 27ம் தேதி முதல் 138 நாட்களுக்கு வக்ரப் பெயர்ச்சி அடைகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீதிக்கும், கர்மாவிற்கும் அதிபதியான சனி பகவான், இந்த ஆண்டு மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளார். ஜூலை 27 தேதி ரேவதி நட்சத்திரம் 2ம் பாதத்தில் தொடங்கும் சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சி டிசம்பர் 11ம் தேதி வரை முடிவடைகிறது. மொத்த 138 நாட்கள் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைகிறது.

வக்ர பெயர்ச்சி என்பது ஒரு கிரகம் பின்னோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும் நிலையாகும். இந்த காலகட்டத்தில் சனி பகவானின் ஆற்றல் தீவிரமடைவதாகவும், பழைய கடமைகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இது ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது.

கடந்த காலத்தில் செய்த வேலைகள் மற்றும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தொழில் ரீதியான தடைகள் குறையும். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகவும், பொருளாதார நிலை சீராகவும் வாய்ப்புகள் உருவாகும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் சுமூகமான தீர்வுகள் கிடைக்கலாம். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சில ராசிக்காரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். உடல்நலம் மற்றும் மருத்துவம் சார்ந்த செலவுகள் ஏற்படலாம்.

ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்கள் இருந்தாலும், குறிப்பாக ஏழுரைச் சனியில் பிடியில் இருக்கும் மீனம், கும்பம், மகரம் ராசிக்காரர்களும், கண்டகச் சனியில் பார்வையில் இருந்து கன்னி ராசியினரும், அஷ்டமச் சனியின் பார்வையில் இருக்கும் சிம்மம் ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எந்தவொரு பெரிய முதலீடுகளையும், அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக மூட்டு வலி, நரம்பு தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்தவும். பிறரிடம் பேசும்போதும், பணிபுரியும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிக்கவும்.

சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றுவது, ஏழை எளியவர்களுக்கு, வயதானவர்களுக்கு உதவிகள் செய்வது மற்றும் இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது சனி பகவானின் அருளைத் தரும்.

Share.
Leave A Reply

Exit mobile version