புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு உற்சாகம் தரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்படுவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மக்களுடன் நெருக்கமாக இருப்பீர்கள். வயதானவர்கள் மருத்துவ ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது நல்லது. மாணவர்கள் கவனச் சிதறல்களைத் தவிர்த்து, பாடங்களில் முழு கவனத்தைச் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
