சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் சுபமாக முடியும். அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் அல்லது எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணங்கள் செல்ல நேரிடலாம். உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
