மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தெளிவான சிந்தனையோடு துணிச்சலாகச் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளின் வியூகங்கள் வெற்றியைத் தரும். முயற்சிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள், பொறாமைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நேர்காணல் மற்றும் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட எண்: 5, 1
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
